ஞயாபக சக்தியை தீர்க்கும் 5 எளிய உணவு முறைகள்

ஞயாபக சக்தியை தீர்க்கும் 5 எளிய உணவு

முறைகள்

ஞாபக சக்தியை இழப்பது என்பது மூளையில் உள்ள செல்களுக்கு குறைந்த அளவு இரத்த ஓட்டம்   நடைபெறுவதால் இந்த ஞாபக சக்தி பிரச்சினை ஏற்படுகின்றது இதை கீழ்கண்ட உணவுப் பொருட்களின் மூலம் நாம் சரிசெய்யலாம்

1. வல்லாரை

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.  7 கிராம் வல்லாரை இலைகளை நிழலில் காய வைக்கவும் காய்ந்த பின்னர் எடுத்து தண்ணீர் விட்டு அரைக்கவும் அதில் ஏழு பாதாம் பருப்பு களையும் அரை கிராம் மிளகுத் தூளையும் அரைத்து 25 கிராம் சர்க்கரையும் கலந்து தண்ணீர் விட்டு காலையில் தினமும் குடிக்க வேண்டும் இரண்டு வாரங்கள் குடிக்க வேண்டும்

 இப்படி செய்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

2. ஞாபகசக்தியை அதிகரிக்கும் பழங்கள்

 அத்திப்பழம் ,திராட்சை பழம், ஆரஞ்சு பழம், பேரீச்சம்பழம் போன்ற பழங்களில் பாஸ்பரஸ் சத்து அதிகமாக இருப்பதால் அதை மூளையில் உள்ள செல்களுக்கு சக்தி ஊட்டுகிறது.  இது மூளையில் பலவீனத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கின்றது.

3. அக்ரூட் எனும் வால்நட்

இது மூளையில் உள்ள பலவீனத்திற்கு நல்ல மருந்து இந்த கொட்டையில் உள்ள பருப்புகளை எடுத்து தினமும் சாப்பிட்டு வர வேண்டும் 20 கிராம் அளவு சாப்பிட வேண்டும் இத்துடன் அத்திப் பழத்தை சேர்த்து சாப்பிட்டால் சிறந்த பலனை அடைய முடியும் வால்நட் பருப்பு 5 கிராம் சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது

4.பாதாம்

வைட்டமின் B6,துத்தநாகம் (Zinc),புரதம்,வைட்டமின் E இருப்பதால்

 மூளை பலவீனத்திற்கு தரலாம். மூளையை பலப்படுத்தும் சத்துகள் இதில் அடங்கியுள்ளன நரம்புத் தளர்ச்சியினால் ஏற்படும் ஞாபக மறதியைத் இது தடுத்து நிறுத்தி மூளையை பலப்படுத்தும் தன்மை கொண்டது

5. கருஞ்சீரகம் மற்றும் மிளகு

கருஞ்சீரகம் மற்றும் மிளகு ஞாபகசக்தி குறைவிற்கு இது ஒரு நல்ல மருந்து 3 கிராம் கருஞ்சீரகம் தூளுடன் 2 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகமாகும். அதேபோல் 5 மிளகுகளை தூளாக்கி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகமாகும்.