பனையின் முக்கிய நன்மைகள்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது.

உணவே மருந்து தமிழ்

பனை நீரின் பயன்கள்

  • பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது.

 

  • இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
  • கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது.

 

  • இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
  • டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.
  • இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.
  • இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

 

  • இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

நமது அன்றாட வாழ்வில் நமது உடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்காக நாம் பல வழிகளில், உழைத்து வருகிறோம். ஆனால் மேலை நாட்டு கலாச்சாரங்கள் ஊடுருவி உள்ள நிலையில், அனைத்து மக்களும் மேலை நாடு கலாச்சாரங்களையே அனைவரும் நாடி வருகின்றனர்.
ஆனால், நாம் இயற்கையான உணவுகளை நாடுவதை விட, இன்று செயற்கையான உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இது நமது உடலுக்கு பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது.பனங்கற்கண்டு என்பது பனையிலிருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி எடுக்கப்படுகிறது. முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும்.

இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.இதை நாம் இப்போது பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரை (சீனி) பதிலாக பயன்படுத்தலாம். சித்தமருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இயற்கை கொடுத்த இந்த இனிப்பு பொருளை நாம் பயன்படுத்தி வந்தாலே நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறலாம். நமது முன்னோர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்தார்கள் என்றால், அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கான உணவு என்னாவாக இருந்திருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். இந்த பதிவில் நாம் பனங்கற்கண்டின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

பனங்கற்கண்டின் நன்மைகள்

  • பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும்.
  • பசியை தூண்டும்.
  • புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

 

  • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று, மார்பு சளி. இப்படிப்பட்டவர்கள், பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி ஆகியவை விலகும்.
  • தொண்டைப்புண், வலி அகலும்.
  • பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

 

  • கருவுற்ற பெண்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது. பனங்கற்கண்டு கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் வயிற்று புண்ணை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இதய நோய் உள்ளவர்களுக்கு பனங்கற்கண்டு ஒரு சிறந்த மருந்தாகும். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுத்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

  • பனங்கற்கண்டில் கால்சியம் அதிகமாக உள்ளது. எனவே இதனை நாம் உட்கொண்டு வந்தால் பற்களின் ஈறுகள் உறுதியாக இருக்கும்.
  • பனங்கற்கண்டில் உள்ள இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
  • 12 கிராம் அளவுள்ள மிளகை நன்கு வறுத்து அதில் 4 கிராம் அளவு சீரகத்தை போட்டு அது வெடித்த சமயம் சிறிது தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி பால் விட்டு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நீர்கடுத்தல், நீர் எரிச்சல், உஷ்ணதாகம், மருந்துகளின் வேகம் இவைகள் நீங்கும்.

 

பகிர்ந்து கொள்ளுங்கள்