மாதுளம் பழத்தின் நன்மைகள் என்ன?

மாதுளம்பழம் வயிற்றில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி கொண்டது விலை மலிவாகக் கிடைக்கக்கூடிய பழமும் இதுதான் மாதுளம் பழத்தின் சாரை நாம் அருந்துவதால் இதயத்திற்கு ரத்தம் சீராக செல்கின்றது  இந்த மாதுளம் சாறை தினமும் நாம் குடித்து வந்தால் இரத்த கொதிப்பு கணிசமாக குறைந்து விடுகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது இரவில் சரியாக தூக்கம் வராமல் இருப்பவர்களுக்கும் நெஞ்சு எரிச்சல் உள்ளவர்களும் மாலையிலோ அல்லது இரவு உணவு உண்பது பிறகு ஒரு மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

இதில் எல்லாஜிக் அமிலமும் பாலிபெனால்ஸ்

என்ற ரசாயன கூறும் உள்ளதால் இதயத்தை  பாதுகாப்பது மட்டுமல்லாமல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.மாதுளம்பழம் ஆண்மை உணர்வைத் தூண்டும் அரிய சக்தி கொண்டுள்ளதால் இது தாம்பத்திய நேரத்தை அதிகரிக்க செய்யும் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்  காரணம் விட்டமின் சி  இந்தப் பணியை செய்கின்றது.

இது மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டத்தை சிறப்பாக வேலை செய்ய வைக்கிறது மாதுளம் பழச்சாறு குடித்து வந்தால் மூளை வளர்ச்சி அதிகமாகவும்  வயதாக வயதாக வரும் ஞாபக சக்தி குறைவு நோயும் சரியாகும்.