முடி உதிர்வை தடுக்க | கருமையாக முடி வளர பாசி பயறு பேஸ்ட் | Home Remedies for Hair Fall

பாசி பயறு என்றவுடன் நாம் சருமம் மற்றும் கேசப் பொலிவிற்காகவும் அழகுக்காகவும் பயன்படுத்துவதே நினைவிற்கு வரும்.மேற்புறம் இருக்கும் பச்சைத் தோலை நீக்கிய பாசி பயறு, பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது.பயறு வகைகள் ‘லெக்யூம்’ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை.முதிர்ந்த பயறுகளில் கிட்டத்தட்ட 20 – 30 சதவிகிதம் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது.பாசி பயறானது இந்தியாவினை தாயகமாகக் கொண்டது.சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பே இப்பயறு, மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்தில் பயிர் செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

 

பாசி பயறில் காணப்படும் என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆகியவை கண்கள், கேசம், நகங்கள், கல்லீரல், சருமம், முடி வளர்ச்சி ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது.முடி உதிர்வை தடுக்க, முடி கருமையாக வளர, முடி உதிர்த்த இடத்தில் மீண்டும் முளைக்க இந்த காணொலியையை முழுமையாக பார்க்கவும்.