இரத்த அழுத்தம் குறைய யோகா

உணவே மருந்து தமிழ்

நமது இதயம் மாறி மாறி உந்தித்தள்ளித்,தளர்வதால், ரத்தக் குழாய்களில் ரத்தம் பாய்ந்து, அக்குழாய்களின் சுவர்கள் அழுத்தப்படுகின்றன.நம்முடைய ரத்தக் குழாய்கள் சாதாரணமாகத் தளர்வடையாமல் இருந்தால், ரத்தக் குழாய் தசைகளில் அடைப்பு ஏற்பட்டால், ரத்த அழுத்தம் கூடும். இதுவே உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகின்றது.

ஒரு நாளில் ரத்த அழுத்தம் வேறுபாடும் என்றாலும், செயல்படும் போது அதிகமாகவும், தூங்கும்போது குறைவாகவும் இருக்கும்.மேலும் வயதானவர்கள், கண்டுபிடிக்காத அல்லது புறந்தள்ளப்பட்ட அழுத்த நிலைகள் மிகவும் அபாயமானவை ஆகும்.மேலும் இது பின்வரும் பல நாள்பட்ட நோய்களுக்குக் காரணமாகும்

  1. இதய செயலிழப்பு மற்றும் (குறிப்பாக விழித்திருக்கும் நேரத்தில்) பக்கவாதம், மாரடைப்பு
  2. தமனிகள் கடினப்படுதல்
  3. பெரிதாகும் இதய தசைகள்
  4. சிறுநீரக சேதம் மற்றும் நாளமில்லா சுரப்பி செயலிழப்பு
  5. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுதல்
  6. கார்டியோ வாஸ்குலர் அமைப்பை பலவீனப்படுதல்
  7. இதயம் மற்றும் தமனிகள் வேலை பளு அதிகரிப்பு

இந்தப் பிரச்சினைக்கு யோகாசனங்கள் பயனுள்ளவை என்று கூறப்படுகிறது.  இந்த யோகாசனங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஒரு ஆல்பா மூளை அலையை உருவாக்குகிறது.

தன்னாட்சி நரம்பு மண்டலத்தில் சமநிலை கொண்டு நரம்பு மண்டலத்தின் பாகங்களை உறுதியாக்கும்.

உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் ஏற்படுவதால், புழக்கத்தில் மேம்பாடு, உஷார்நிலை, அறிவாற்றல் திறன்கள் அதிகரிக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கும்

வலிமை, நெகிழ்வுத்தன்மை, மன அமைதி போன்றவை ஊக்குவிக்கப் படும்.மேலோட்டமான சுவாசம் மற்றும் அதிகரித்த இதய துடிப்பு பிரச்சினைகள் சரி செய்யப்படுகின்றது.உடலின் எல்லா பாகங்களுக்கும் பிராண வாயு அனுப்பப் பட்டு, உடல் தன்னைத் தானே ஆற்றுப் படுத்திக்கொள்ள உதவுகின்றது.

எடை இழப்பை ஊக்குவிக்கின்றது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உடல்பருமன் அதிகரிக்க அதிகரிக்க  சர்க்கரையின் அளவும், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். தினசரி காலையில் குறைந்தது 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். அதுபோல இயற்கையை ரசித்தபடியே 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. இதனால்  நமது உடலின் எடை எப்போதும் கட்டுக்குள் இருக்கும். ரத்த அழுத்தமும் சீராக இருக்க உதவும்.

பரிந்துரைக்கப்படும் யோகாசனங்கள்

  1. ப்ரம்மாரி பிராணாயாமா
  2. சேது பந்தனாசனா
  3. பவன முக்தாசனா (தலையினைத் தூக்காமல்)
  4. மகராசனா ப்ரம்மரி பிராணாயாமத்துடன்
  5. சிசு ஆசனா

யோகப் பயிற்சி உடலையும் மனதையும் ஊக்குவித்து ஏராளமான உடல்நல பயன்களை தருகின்றது.ஆயினும் இது மருந்துகளுக்கு மாற்று அல்ல. நன்றாக தேர்ச்சி பெற்ற ஒரு யோகா ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் யோகா பயிற்சிகளைக் கற்க வேண்டும் என்பது முக்கியமானது ஆகும்.