Breaking News
Home / எண்ணம் போல் வாழ்க்கை / உளவியல் சிக்கலை சரி செய்தால் உடல் நிலை சரியாகும்

உளவியல் சிக்கலை சரி செய்தால் உடல் நிலை சரியாகும்

உணவே மருந்து தமிழ்

உளவியல் அல்லது மன நெருக்கடியால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைக்கிறது. மேலும் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. இதனை அமைதியான கொலையாளி எனவும் அழைக்கலாம். இழுவை வியாதி, உயர் அழுத்தம், ஒற்றை தலைவலி, வயிற்றுப் புண் மற்றும் கடி, சிரங்கு போன்ற நோய் நிலைமைகள் மன அழுத்தத்துடன் ஒரு தொடர்பில் காணப்படும்.

மன அழுத்தத்துடன் பின்வரும் காரணிகள் தொடர்பாக காணப்படுகிறது. அவை குழந்தைப் பருவ பதகளிப்பு, உயிரியல் செயற்பாடுகள், குடும்ப சூழல், வேலைத்தளம் என்பனவாகும். வெவ்வேறு சூழலியல் காரணிகள் வெவ்வேறு விளைவுகளை உருவாக்குகின்றன.

உளவியல் நெருக்கடியானது அச்சம் மற்றும் பயம் காரணமாக ஏற்படும் ஒரு நிலை எனக் கொள்ளப்படுகின்றது. இது நரம்பு சார்ந்தும், உள்ளம் சார்ந்தும் காணப்படும். நரம்பு சார்ந்து காணப்படுகையில் உடலின் தொழிற்பாட்டு மாற்றங்களின் காரணமாக அச்சம் என்பது முதன்மை அறிகுறியாகக் காணப்படும். உள்ளம் சார்ந்து காணப்படும் போது அசாதாரண அச்சம், பதட்டம், கவலை என்பன குறித்துக் காணப்படும்.

மன அழுத்தம் முரண்பாடு, விரக்தி, ஆக்கிரமிப்பு, ஓய்வின்மை, பதட்டம், அக்கறையின்மை, காதல், கற்பனை வடிவம் மற்றும் பின்நோக்கிச் செல்லல் போன்றவற்றை அதிகரிக்கும்.ஒரு தனிநபர் தனது இலக்குகளை அடைய முற்படுகையில் எப்போது தடைப்பட்டு நிற்கின்றாரோ, அப்போதே அவர் அடிக்கடி இது போன்ற உடல் நலக் கோளாறுகளுக்கும் வித்திடுகிறார்.

முற்றிய நிலையில் அளவுக்கதிகமான பயம் மற்றும் கவலை காணப்படும். இதன் அறிகுறிகளாக ஓய்வின்மை, களைப்பு, கவனக் குறைவு, எரிச்சல், தசைப்பிடிப்பு, தூக்கத்தில் தொல்லை என்பன காணப்படும்.

தீவிரமான பயம், பதகளிப்பு. இது ஒரு குறிப்பிட்டபொருள் அல்லது சூழ்நிலை குறித்து அறிவுக்கு பொருந்தாத வகையில் அச்சம் காணப்படும். இதன் சில வகைகள் நிலைகள் பின்வருமாறு குறிக்கப்படுகின்றன. சாதாரண அச்சம், சமூக அச்சம், உயர்ந்த இடங்களில் இருக்கும் போது அல்லது காணும் போது ஏற்படும் பேரச்சம், இரத்தத்தை கண்டால் பேரச்சம், சன நெருக்கத்தைக் கண்டால் அச்சம் போன்றவை தோன்றும்.

எதிர்பாராத நேரங்களில் திடீரென தோன்றும் கடுமையான பயம் அல்லது அசௌகரியம். இது 10 நிமிடங்களிற்குள் உச்சநிலையை அடையும். இதன் அறிகுறிகளாக படுவேகமாக இதயம் துடித்தல், குலுக்குதல், உதறல், சுவாசக் குறைவு, வியர்வை, வயிற்றில் கஷ்டம், தலைப்பாரம், கட்டுப்பாட்டை இழப்பதாக ஒரு பயம் என்பன காணப்படுகின்றன. மேலும் தேவையற்ற எண்ணங்கள் தனது மனதில் திரும்பத்திரும்ப தோன்றுவாதல் தன் சுய நினைவால் தடைக்கு எதிராக செயற்படும் நிலை கூட உருவாகும். இதன் அறிகுறிகள் குறைந்தது இரு நாட்கள் தொடக்கம் நான்கு கிழமைகளுக்கே காணப்படும்;.

மனச்சோர்வு என்பது உணர்ச்சியைப் பாதிக்கின்ற ஒன்றாகும். இது உணர்ச்சியிலும் மன நிலையிலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.மனத்தளர்வற்ற மனநிலை இரண்டு கிழமைகளுக்காவது காணப்படுதல் வேண்டும். இக்காலத்தில் அவர்களின் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும் மாறுபட்டுக் காணப்படும்.

இருதுருவ கோளாறு மனச்சோர்வையும் பித்து நிலையினையும் கொண்டு காணப்படும். பித்து நிலையின் போது காணப்படும் அறிகுறிகள் மனச்சோர்வு நிலையின் போது மறுதலையாகக் காணப்படும். பித்து நிலையில் அவரின் மனோ நிலை சாதாரண நிலையை விட்டு மேலோங்கி காணப்படும்.

எனவே உளவியல் பிரச்சினைகளை சரி செய்தால் தான் உடல் நிலை சரியாகும் என்பதை எளிதில் அறியலாம்.  ஆரோக்கியத்தை பேணிக் காக்கலாம்.

Check Also

மகிழ்ச்சியின் இரகசியம்

மகிழ்ச்சியின் இரகசியத்தை நாம் தெரிந்து கொள்வோம் ஒரு சிறிய கதையின் மூலம் தெரிந்து கொள்வோம் மேலும் காணொளியை காண்க. https://youtu.be/rYL0QFCgkFYVideo …

3 comments

  1. Theeya palakkathiku adimaiyanathil irunthu vidubada ethana oobaayam.

  2. Theeya palakkathiku adimaiyanathil irunthu vidubada ethana oobaayam.

  3. How to overcome from evil habits?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.