ஒமேகா ஊட்டச்சத்தில் இருக்கும் 13 முக்கிய பயன்கள்

எல்லா ஊட்டச்சத்துகளை போல கொழுப்புச் சத்தும் நம் உடலுக்குத் தேவை.  கொழுப்பு சத்துக்களில் கெட்ட கொழுப்பு, உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு என இரு வகைகள் இருக்கின்றன. இதில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்பு மற்றும் அமிலத்தன்மை நிறைந்த ஒரு சத்து தான் ஒமேகா – 3 சத்தாகும். இது செரிவூட்டப்படாத கொழுப்பு வகையை சார்ந்ததாகும்.

காணப்படும் உணவுகள்

மீன், கோழிக்கறி, முட்டை, பருப்புகளில் இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. மீன் போன்ற கடல் உணவுகளில் இருந்து கிடைக்கும் இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடல் நேரடியாக பயன்படுத்திக்கொள்ளும்.

நன்மைகள்

  1. அன்றாடம் நாம் உண்ணும் அதிக கொழுப்புச் சத்து இல்லாத உணவுகள் தான் நம் இதயம் நன்றாக இயங்கவும், நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கவும் காரணமாகிறது. இந்த வகையில் ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து உணவுகளில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் ரத்தத்தில் படிவதை தடுப்பதால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் மற்றும் இதயத் தசைகளின் இயக்கம் சீராக்கப்பட்டு, இருதய பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  2. ஒமேகா3 இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் சீராக்கி பக்கவாதம் ஏற்படாமல் காக்கிறது.
  3. கர்ப்பிணி பெண்கள் ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து உணவில் சேர்த்து உண்ண வேண்டும். இது கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நன்மை புரிகிறது.
  4. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் நீக்குவதோடு பிறக்கின்ற குழந்தையின் மூளை செயல்திறன் நன்றாக இருக்க இந்த ஒமேகா3 உதவுகிறது.
  5. ஆஸ்துமா என்பது மனிதர்களில் நுரையீரலை பாதித்து, பல சமயங்களில் மூச்சுக் காற்றை சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்த கூடிய ஒரு நோயாகும். இந்த நோய் பரம்பரை காரணமாகவும், ஒவ்வாமை போன்றவற்றாலும் ஏற்படுகின்றது. இதற்கு ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு  மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.
  6. ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் அதிலிருக்கும் சத்துக்கள் நமது மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுபடுத்தியதோடு, வயது மூப்பு காரணமாக உண்டாகும் அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் மற்றும் பிற மனநல குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  7. நரம்புகள் சம்பந்தமான குறைபாடுகள் இருப்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை அதிகம் காணப்படும். ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, அதில் இருக்கின்ற மெலடோனின் எனப்படும் ஹார்மோன் உடலில் கலந்து மிக விரைவிலேயே நீண்ட நேரம் ஆழ்ந்த தூக்கத்தை தருவதன் மூலம் நரம்புகளுக்கு வலிமையை தரும் ஆற்றல் பெற்றிருக்கிறது.
  8. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பலருக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் சோர்வடைந்து உடல் சத்து இழப்பு ஏற்படுகிறது. ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கடுமையான வலி உண்டாவதை தடுப்பதோடு இதர மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கிறது.
  9. தற்போது உலகம் முழுவதும் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் வயிறு மற்றும் இரைப்பை புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி புற்று செல்கள் வளராமல் தடுக்கிறது.
  10. ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பிரோஸ்ட்ரேட் புற்று, பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய்களையும் தடுக்கும் ஆற்றல் ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து அதிகம் கொண்டுள்ளது.
  11. கல்லீரல் நலமாக இருந்தால் நாம் பெரும்பாலான நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் காத்துக் கொள்ள முடியும். அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு மது அருந்தாத கல்லீரல் புற்றுநோய்  உண்டாகிறது. இதனால் கல்லீரல் பாதிப்பு உண்டாகி சமயங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு நோயாக மாறுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் கல்லீரலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகள் அறவே நீக்குகிறது.
  12. டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலின் செல்களை நோய் எதிர்ப்பு மண்டல செல்கள் அழித்து விடுகிறது.ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இத்தகைய ஆட்டோ இம்யூன் டிசீஸ் எனப்படும் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
  13. குழந்தைகளுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து நிறைந்த உணவுகளை கொடுத்து வந்தால் அவர்களிடம் மன அமைதி, கவனம் செலுத்தும் திறன், தேவைக்கு அதிகமான செயல்பாடு குறைவு ஆகியவை அதிகரிக்கும்.

ஒமேகா3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடலால் உருவாக்க முடியாது. எனவே, இதை உணவின் மூலம் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். எண்ணெய் சத்துமிக்க மீன்,  வால்நட், ஆளி விதை போன்றவற்றில் இருந்து போதுமான அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் எடுத்துக் கொண்டால் இதன் குறைபாடுகளைத் தவிர்க்கலாம்.