கருப்பு திராட்சையில் இருக்கும் “proanthocyanidin” எனும் சத்து

கருப்பு திராட்சையில் பல நன்மைகள் உள்ளது குறிப்பாக கருப்பு திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. நமது முடியை வழுவாக்க உதவும் “லிவோலியிக் அமிலம்” திராட்சை பழத்தில் இருக்கிறது இது முடி உதிர்வதை தடுக்கும் சக்தி கொண்டது.

மேலும் கருப்பு திராட்சையில் இருக்கும் நன்மைகளை காணலாம்.


● திராட்சை பழத்தில் இருக்கும் முக்கிய சத்துக்கள் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து,  மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன.


● கருப்பு திராட்சையின் சதை பகுதியில் 20 தான் புரோ ஆன்தோ சயனிடின் உள்ளது. ஆனால் திராட்சை விதைகளில் 80 உள்ளது.


● புரோ ஆன்தோ சயனிடின் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது இனிமேல் விதை உள்ள திராட்சையை வாங்கி சாப்பிடுங்கள்.


● திராட்சையிலுள்ள அதிகளவிலான “ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்”  புற்று நோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது.


● திராட்சை விதை சாற்றினை இயற்கை உணவு என ஜப்பான் அங்கரித்துள்ளது மட்டுமல்லாமல் வருடம் தோறும் ஒரு லட்சம் விதைகளை பயன்படுத்தி வருகின்றனர் . நாமோ விதை இல்லாத திராட்சை மீது தீரா மோகம் கொண்டுள்ளோம்.


● பிரான்சில் நாற்பது ஆண்டுகளாக திராட்சை விதைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் உலகில் மாரடைப்பு நோய் குறைவாக உள்ள நாடு பிரான்ஸ் என ஆய்வுச் செய்திகள் கூறுகின்றன.


● திராட்சையை தினமும் உணவில் சேர்த்துவந்தால் நமது சிறுநீரகங்களை நன்றாக பாதுகாக்கலாம்.


● திராட்சைகளில் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய ரெஸ்வெராட்ரோல் #resveratrol இருக்கிறது.


● அதிக antioxdant டை பெற்றுள்ளதால் நாள்பட்ட நோய்களை காக்கவும் சேதமடைந்த செல்களை சரி செய்யவும் இந்த திராட்சைகள் பயன்படுகிறது.


● திராட்சைகளில் ரெஸ்வெராட்ரோல், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற பல சேர்மங்கள் உள்ளன, அவை பொதுவான கண் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.

● திராட்சை ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டி ராலை கரைக்கிறது.


● ஆர்கானிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ்  வயிற்றை பாதுக்காப்புடன் வைத்திருக்க உதவுகிறது.


● திராட்சை சாப்பிடுவது உங்கள் இதயத்திற்கு நல்லது.


● திராட்சை சாப்பிடுவது உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் மற்றும் உங்கள் நினைவகத்தை அதிகரிக்கும்.