கர்ப்பகாலத்தில் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் ? | What foods should be eaten during pregnancy?

கர்ப்பகாலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள்:
பெண்களுடைய வாழ்க்கையில் மிகமுக்கியமான காலகட்டம் எதுவென்றல் கர்ப்பகாலம் தான் .பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் கர்ப்பகாலம் மிகவும் சோதனையான ஒரு காலகட்டமும் ஆகும் .ஏனென்றால் இந்த நேரத்தில் பெண்களுக்கு உடலளவிலும் மனத்தளவிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன .

இதுமட்டுமில்லாது கர்ப்பகாலத்தில் உணவு குறித்த பல சந்தேகங்களும் கருத்தரித்துள்ள பெண்களுக்கு ஏற்படும் .
எந்தந்த உணவுகளை உண்ண வேண்டும்  என்ற குழப்பம் இருக்கும் .எனவே பெண்கள் தகுந்த ஆலோசனைகளை பெற்று ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் .உங்களின் உணவுமுறை தான் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஒரு மூல ஆதாரம் .

கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல ஆரோக்கியமான ,சுத்தமான சத்துணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்கீரை ,பேரிச்சம்பழம் ,உலர் திராட்சைகள் ,பாதாம் , ஆட்டு ஈரல் ,பனங்கற்கண்டு ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது .

இரும்பு சத்து குழந்தைகளின் வளர்ச்சியையும் உடல் எடையையும் அதிகரிக்கவும் உதவுகிறது .தாய்மார்கள் மற்றும் குழந்தைக்கு ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் .கருவில் உள்ள குழந்தைகள் தாயின் உடலில் இருந்து இரும்பு சத்தை உறிஞ்சி சேமித்து வைக்கும் .அதன் காரணமாக பிறக்கும் குழந்தையின் உடலில் ஆறு மாதத்திற்கு தேவையான இரும்புச்சத்து இருக்கும் .

எனவே கர்ப்பிணிகள் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 35கிராம் இரும்பு சத்தை சேர்த்து கொள்ளுங்கள் .இன்று இந்தியாவில் 55% பெண்கள் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர் .

கால்சியம் சத்து அதிகரிக்க தயிர் ,கேழ்வரகு ,கருவேப்பிலை ,மணத்தக்காளி கீரை ,மீன் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் . பருப்புகள் ,தானியங்கள் ,பயறு வகைகள் ,காய்கறி ,பழங்கள் ,பால் ,வெண்ணெய் ,காய்ந்த திராட்சைகள்,வேர்க்கடலை ,ஆடு மற்றும் நாட்டு கோழி இறைச்சி போன்ற உணவுகளை கர்ப்பிணிகள் சாப்பிடலாம் .

ஆனால் கர்ப்பகாலத்தின் முதல் 3 மாதங்களுக்கு தினமும் உணவில் கூடுதலாக 0.5கிராம் புரதம் அடுத்த 3மாதங்களுக்கு 6.9கிராம் புரதம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .

கர்ப்பிணிகளுக்கு இதுமட்டுமில்லாது ஊட்டச்சத்துக்களான வைட்டமின் மற்றும் தாதுஉப்புக்கள் மிகவும் தேவை.கர்ப்பகாலத்தில் பெண்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் .குறைந்த பட்சம் 9முதல் 12வரை தண்ணீர் குடிக்க வேண்டும் .இதனுடன் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும் .இது மலச்சிக்கல் வருவதை தடுக்கிறது .

அதிகமாக வாந்தி எடுக்கும் பெண்கள் எளிதில் ஜீரணமாகும் உணவை சிறுது சிறிதாக சாப்பிட வேண்டும் .அந்த சமயத்தில் தேவையான உணவை சாப்பிட தவறக்கூடாது .அதிகமான வாந்தியால் ஏற்படும் நீர் இழப்பை ஈடுகட்ட தண்ணீர் ,பழரசம் நிறைய குடிக்க வேண்டும் .