கவலைகளை போக்க 5 எளிய வழிகள்

கவலை என்பது என்ன ?

கவலை என்பது மனக் கோளாறுகளின் ஒன்று ஆகும் ,  கவலை என்பது எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கவலை மற்றும் பயம் தற்போதைய நிகழ்வுகளுக்கு ஒரு எதிர்வினை. இந்த உணர்வுகள் விளைவால்  விரைவான இதய துடிப்பு மற்றும் பதட்டம் நடுக்கம் போன்ற உடல் அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.

கவலையை நாம் விட்டுத்தள்ளாவிடில் நாம் மனதளவில் பாதிப்படையவதோடு மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பாதிப்படைய கூடும் இதன் அதிகபட்ச விளைவு நிம்மதில்லாத வாழ்க்கையை வாழ்வது போன்ற எண்ணம் நம்மில் எழும் ,  அந்த எண்ணம் நமது வாழ்வை மாற்றும்  தன்மை கொண்டது . கவலையை விட்டுத்தள்ளிவிட்டு ஆனந்தமாக வாழ்ந்தால் நம்மை சுற்றி நடப்பதும் நன்மையாகத்தான் இருக்கும் .

சரி  கவலை இன்றி ஆனந்தமாக வாழ என்ன செய்வது  என்பதை பற்றி பார்ப்போம் .

நிறைய காரணிகள் கவலைகளை ஏற்படுத்தலாம் அதில் இருந்து வெளியே வர இதை பின்பற்றி பாருங்கள்

  1. நேரம் ஒதுக்குங்கள்

நீங்கள் கவலையால் மூழ்கும்போது தெளிவாக சிந்திக்க இயலாது. அதனால் முதலில் ஒரு சில மாற்று வேலைகளை செய்ய நேரம் அதுக்குங்கள் அப்படி செய்யும் பொழுது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்  அமைதியாக இருக்க முடியும்.

உதாரணத்திற்கு

விளையாட்டு மைதானம் சென்று விளையாடுங்கள்  ,  புதிய இடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்யுங்கள் , அங்கு நடக்கும் இன்பமான தருணங்களை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள் .

  1. உங்கள் அச்சங்களை எதிர்கொள்ளுங்கள்

அச்சங்களை பார்த்து பயப்படுவதுதான் உங்களை மீண்டும் மீண்டும் கவலை அடைய செய்கிறது . ஒருமுறை அதை எதிர்த்து போராடி பாருங்கள் அந்த அச்சம் குறைய துவங்கும் நீங்கள் கவலை இன்றி தன்னம்பிக்கையோடு இருப்பதை உணர்வீர்கள்

ஒரு செயலை செய்ய அச்சப்படும் நாம் அதே செய்யலை இந்த நொடி வேறு ஒருவர் ஆனந்தமாக செய்கிறார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்  ( நீங்கள் செய்யும் செயல் தீமையாக இருப்பின் அச்சம்  வருவதை யாராலும் தடுக்க முடியாது – தீய விஷயங்களை செய்ய அச்சப்படுங்கள் நல்ல விஷயங்களை செய்ய ஆனந்தபடுங்கள்  )  எந்த ஒன்றும் துரத்தினால் ஓடிவிடும் அதை போல் தன அச்சமும் துரத்தினால் ஓடிவிடும் உங்களை விட்டு

  1. மெதுவாக சுவாசிக்கவும்

பயம் காரணமாக உங்கள் இதயத்துடிப்பு அதிகமானாலோ  வியர்வை அதிகமானாலோ நீங்கள் அதை எதிர்த்துப் போராடுவதே சிறந்த விஷயம்.

உங்கள் உள்ளங்கையை உங்கள் வயிற்றில் வைத்து மெதுவாகவும் ஆழமாகவும் சுவாசிக்கவும்.

பயத்தை  சமாளிக்க  இதயத்துடிப்பை கட்டுப்படுத்த மெதுவான மூச்சு பயிற்சி  செய்து பழகிக்கொள்ளுங்கள் ,  ( பயமோ பதட்டமோ வந்தால் கவலை படாதீர்கள் அனைத்தையும் சமாளிக்கும் சக்தி நம்மிடம் உண்டு என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் அதுவே பாதி  பயத்தை போக்கிடும் )

  1. போதைக்கு அடிமையாகாதீர்கள்

பதட்டத்தை சமாளிக்க ஏராளமான மக்கள் ஆல்கஹால் அல்லது போதைப்பொருளை நோக்கி செல்கின்றனர் , ஆனால் இது கவலையை சரி செய்யாது உடலின் பல பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் .

அதற்கு  பதிலாக ஒரு நல்ல இரவு தூக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் நடை போன்ற எளிய, அன்றாட விஷயங்கள் செய்யுங்கள் .

  1. எந்த கவலையும் நீடிக்காது

மனித வாழ்கை மாறிக்கொண்டே தான் இருக்கும் எதுவும் நிரந்தரமற்றது  ஒரு உதாரணத்திற்கு  உங்களுக்கு  நெருங்கிய நண்பரோ உறவினரோ இறந்துவிட்டால் இந்த கணம் நாம் அழுவதும் கவலை படுவதும் நியாமான  ஒன்று தான் ஆனால் அந்த சம்பவத்தை நினைத்து ஒரு 5 வருடம் கழித்து  நம் அழுதுகொண்டிருப்போமா ?  அதே போல் நாம் எதையும் பிடித்து வைத்திருக்க தேவையில்லை இன்பமும் துன்பமும் வருவதும் போவதும் வழக்கம் அதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்வது தான் சிறந்தது . எந்த கவலையும் நீடிக்காது . மனதில் தேவை இல்லாத விஷயங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்  தேவையற்ற விஷங்களை தூக்கி  போடுங்கள் , தேவையற்ற விஷங்களை தூக்கி  போட்டபின்னர் நமக்கு தேவையான ஆனந்தமான விஷயங்கள் மட்டும் நம்மில் இருக்கும் .