Friday , February 28 2020
Home / உணவே மருந்து / உணவுகள் / காம்பில் இருக்கும் 10 முக்கிய நன்மைகள்

காம்பில் இருக்கும் 10 முக்கிய நன்மைகள்

1. இரும்பு சத்து அதிகம்

அரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ள இந்தத் தானியத்தை வேகவைக்க கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். சாதாரண அரிசியைப் போல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடிபோட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பிறகு உலையில் போட்டு வேகவைத்தால்தான் நன்கு குழைவாக வரும். மேலும் கம்பு அரிசியைக் காட்டிலும் அதிக சுவை கொண்டது.

 

2.உடல் உஷ்ணத்தை குறைக்க

கம்பின் முக்கிய பண்பே உடல் உஷ்ணத்தை குறைப்பதாகும். இரவு நேரங்களில் தூங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் மனதுடன் உடலும் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி,  மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவார்கள்.

 

3.அஜீரண கோளாறு மற்றும் வயிற்று புண்

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்துவதன் மூலம் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.இதனால் வாய்ப்புணும் குணம் பெற்றிடும்.கம்பு மற்றும் அரிசி இரண்டையும் சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

 

4. உடல் வலுவாக

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். மேலும் இதயத்தை வலுவாக்கும்.சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

 

5. அதிக கனிம சத்து உள்ளது

அரிசியைக் விட கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம் அளவில் கொண்ட தானியம் கம்பு. கர்நாடகாவிலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் கூட அதிகமாக விளைவிக்கப் படுகிறது.தாதுவை விருத்தி செய்வதன் மூலம் இளநரையைப் போக்கும்.அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல் உண்டாக்கும். எனவே அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு மிகவும் நல்லது

 

6. மாதவிடாய் பெண்களுக்கு

அனைத்துச் சத்துக்களுமே அதிகமாக உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.கம்பு ரொட்டி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. கம்பில் உள்ள மிகக் குறைந்த கிளைசெமிக் தன்மையாலும், ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச்சத்தினாலும், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்னையைத் தராது.

7. சர்க்கரை நோயாளிகளுக்கு

கம்பில் உள்ள அமைலோஸ் அமைலோபெக்டின் அமைப்பு நெல் அரிசியைக் காட்டிலும் மாறுபட்டது மற்றும் இறுக்கமானது. அதனால் செரிப்பதற்கு கொஞ்சம் தாமதமாகும். இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசெமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்கு ஏற்றதாக விளங்குகிறது.

 

8. இளைமையாய் இருக்க

செல்கள் பாதுகாப்பிற்கும் கம்பு உதவி புரிகிறது.கம்பு உணவுகளை தினந்தோறும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்றுநோய்  ஏற்படுவது தடுக்கப்படுகிறது.கம்பு உட்கொள்பவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்களில் பிராணவாயு உபயோகிப்பை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோல் பளப்பளபையும் இளமை தோற்றத்தையும் தருகிறது.

 

9. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு 

தாய்மார்கள் தினமும் கம்பங்கூழ் மற்றும் களி போன்றவற்றை உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.மாதவிடாய் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயின் போது சமயங்களில் அதிக ரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இந்த நேரங்களில் இளம் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் அருந்த பிரச்சனைகள் தீரும்.

 

10.உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கும் கம்பு

ரத்த கொதிப்பு கம்பு ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது.முடி நன்கு வளர தேவையான கெராட்டீன் எனும் புரதம் கம்பில் அதிகம் நிறைந்துள்ளது.

Check Also

வெள்ளை முள்ளங்கி

காய் வகைகளில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் ஒரு கிழங்கு வகை தான் இந்த வெள்ளை முள்ளங்கி. இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *