குக்கரில் வேகவைப்பதால் உணவின் தரம் குறையும்

உணவே மருந்து தமிழ்

பண்டைய காலங்களில் நம் முன்னோர்கள் உணவுப் பொருட்களை வேக வைக்க பானைகள் தான் பயன்படுத்தப் பட்டன. தற்காலத்தில் நாம் உணவை வேகவைத்தால் போதும், அது பானையாக இருந்தால் என்ன , குக்கராக இருந்தால் என்ன இரண்டும் வெப்பம்தானே என்ற நிலைக்கு வந்து விட்டோம்.

குக்கரில் சமைப்பதால் சமைக்கும் நேரம் குறைவு, எரிபொருள் தேவைக்குறைவு, 95 சதவிகிதம் சத்துக்கள் அப்படியே உள்ளது. இதனால் எளிதில் செரிமானம் ஆகின்றது. நீர், பணம் சேமிப்பு போன்ற காரணங்களை மக்கள் பிரதானமாகக் கூறுகின்றனர். ஆனால் இது உண்மை இல்லை.

இயற்கையின் விதிப்படி, திறந்த பானையில் வேகும்போது 100 டிகிரி சென்டிகிரேட் மேல் தாண்டுவதில்லை. அதற்கு மேல் வெப்பம் அடைந்தால் ஆவியாக மாறி உள்ளுரை வெப்பத்துடன் சேர்ந்து வளிமண்டலத்தில் கலந்து விடும். எந்த உணவைச் சமைத்தாலும் மேலே நுரைகள் வரும், அந்த நுரைகள் யாவுமே தீங்கானவை. இவைகளை நாம் கரண்டி மூலம் வழித்து போட்டு விடுவோம் அல்லது வடித்து விடுவோம்.

மேலும் குறைந்த வெப்பத்தில் பொறுமையாக வேகும்போது, சரிசமமாக உணவு வெந்துவிடுகிறது. நீண்ட நேரம் , குறைந்த வளிமண்டல வெப்பத்தில் மற்றும் குறைந்த அழுத்தத்தில் தயாரிக்கப்படும் உணவே எளிதாக செரிமானம் ஆகும். இதை செரிமானம் செய்ய குறைந்த அளவு பித்த நீர் மற்றும் சுரப்பு நீர்கள் போதும். இதில் கெட்ட கொழுப்போ, அதிக கழிவு பொருள்களோ உருவாவது இல்லை. இரைப்பையில் அமிலத் தன்மை  போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. நல்ல சர்க்கரை அளவும் அதிகமாக உருவாகும். இதனால் சர்க்கரை நோய் உருவாகாது .

குக்கரில் 120 டிகிரி வெப்பத்தில் உணவுப் பொருட்கள் வேகின்றது. குக்கரில் அரிசி, தானியங்களை வேக வைக்கும்போது அதீத உடனடி வெப்பத்தினால் , அதிக அழுத்தத்தால் விரைவாக வெந்து மிருதுவானத்தன்மையை எட்டிவிடும். ஆனால், உண்டபின் வேகமாய் செரிமானம் ஆகாமல் அசௌகரியமாக இருக்கும். அதிக அளவு அமிலத்தன்மை தேவைப்படும். மேலும் தரம் குறைந்த சர்க்கரை உருவாகி, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். காரணம் குக்கரில் சமைக்கும் போது, பானையைப் போல் நுரை போன்ற அமிலத்தன்மை வெளியேறாமல் உணவுடனே இருப்பதால் ஆகும்.

குக்கரில் சரியான பதத்தில் இறக்கினாலும், செரிமானம் ஆனாலும், உயிர்சத்துக்கள் உடலால் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இதனால் இன்சுலின் சுரப்பு தடைப்பட்டு, பசி எடுக்காமல் நீரிழிவு நோய், மூச்சுகுழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற 48 வகையான நோய்கள் தாக்குகிறது.

குறிப்பாக பிரஷர் குக்கரில் அசைவ உணவுகள் சமைக்கும்போது , நிறைவற்ற கொழுப்புகள் குறைவதால் குறைந்த ரத்தழுத்தம் ஏற்பட்டு இதய நோய் ஏற்படுகிறது.

முடக்குவாதம், கபம் போன்ற நோய்கள் வர இந்த குக்கர் உணவுகள்தான் காரணம்.

முடிந்த வரை பானையில் சமைப்பது நல்லது. முடியாவிட்டால் திறந்த நிலையில் அறை வெப்ப நிலையில் சில்வர் , பித்தளை, வெண்கலம் போன்ற ஏதோ ஒன்றில் சமையுங்கள். இலையெனில் குக்கர் உணவுகள் நன்மை என்று கூறி நாம் கார்ப்பரேட் வலையில் வீழ்கிறோமோ, இல்லையோ நோய்களால் நிச்சயம் வீழ்த்தப்படுவோம்.