Friday , February 28 2020
Home / உணவே மருந்து / சிவப்பு கொய்யாவின் 10 முக்கிய பயன்கள்

சிவப்பு கொய்யாவின் 10 முக்கிய பயன்கள்

1. இரத்த அழுத்தம் குறைய

இயற்கையாகவே சிவப்பு கொய்யாவானது அதிக நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் கொண்டுள்ளது. இதனால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

2. உடல் மற்றும் எலும்பு வளர்ச்சி அடைய 

ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் குறைந்த அளவு சர்க்கரையே இருக்கிறது. கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.

3.மலச்சிக்கல் தீர

நாள்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.கொய்யாவில் உள்ள பூஞ்சையை கொல்லும் தன்மை, வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். குறிப்பாக இப்பழத்தை வயிற்றுப் போக்கின் போது உட்கொள்வது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும்.

4. நீரிழிவு நோய்க்கு

நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

5.வயிற்றுப்புண்

தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாவை சாப்பிடலாம்.கல்லீரலைப் பலப்படுத்த அடிக்கடி கொய்யாப்பழத்தை உண்பது நல்லது.

6. சரும அழகிற்கு

கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. இதன் தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது மற்றும் முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக மாற்றுகிறது.

7.புற்றுநோய் அபாயம் குறைய

கொய்யாப்பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.

8. கர்பிணிகளுக்கு நல்லது

கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது.

9. மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு

கொய்யா பழத்தில் உள்ள போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்களும் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.

10. நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு 

சிவப்பு கொய்யாவில் வெள்ளை கொய்யாவை விட நீர்ச்சத்து, வைட்டமின் சி அதிகம், சர்க்கரை, ஸ்டார்ச் போன்றவை குறைவு.சிவப்பு கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ளும்.

 

Check Also

வெள்ளை முள்ளங்கி

காய் வகைகளில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் ஒரு கிழங்கு வகை தான் இந்த வெள்ளை முள்ளங்கி. இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *