Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / சிவப்பு முள்ளங்கி

சிவப்பு முள்ளங்கி

பூமிக்கு அடியில் வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன. அந்த நன்மைகளை இங்கு காணலாம்.

 

இதயம் தொடர்பான நோய்களை குணமாக்கும்

மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும்

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து ஆஸ்டியோபோரோஸிஸ், மூட்டு வாத நோய், கண் நோய் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் என பல்வேறு நோய்களைத் தடுக்கும் சக்தியாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.

உடல் எடையில் முக்கிய பங்கு

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், எடையைக் குறைக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது. குறைவான கலோரிகளையே கொண்டிருப்பதால், நிறைய சாப்பிட்ட உணர்வையும், உடலை சரியாக இயங்கச் செய்யவும் உதவுகிறது.மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன. எனவே சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு இடுப்பு அளவை குறைக்க தொடங்கலாம்.

இதயத்தின் நண்பன் சிவப்பு முள்ளங்கி

இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது. ஃபோலேட் மற்றும் வைட்டமின் B ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும்.

புற்றுநோய் தடுப்பு

சிவப்பு முள்ளங்கியில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்ப்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன. சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட் ஆகியவை உடலில் கட்டிகள் வளருவதை தடுக்கின்றன. சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் கட்டிகள் வராமல் தடுத்து விடலாம்.

உறுதியான எலும்பு கட்டமைப்பு

ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான தாதுக்கள் நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.

பார்வைக்கு பலம் கூட்டும்

தினசரி உணவில் சூப் மற்றும் சாலட் போன்று பல்வேறு வழிமுறைகளில் நீங்கள் சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் பார்வைக் கோளாறுகளை தவிர்க்க முடியும். இதில் லூடெயின் அதிகளவில் உள்ளதால் பார்வைக்கு மிகவும் பலமூட்டும் தன்மையை கொண்டுள்ளது. இந்த தாவரத்தில் உள்ள கேட்டெனாய்டு கண்களின் நலனை பராமரித்து, கண் நோய் மற்றும் மக்குல் சிதைவு ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கும்.

ஆஸ்துமாவிற்கு நிவாரணம்

நாம் ஆஸ்துமா நோயாளியாக இருப்பின் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த காய்கறியில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன. தொடர்ச்சியான சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா இருந்தாலும்  குணமாகி விடும்.

செரிமானத்திற்கு உதவும்

நார்ச்சத்துக்கள் நிரம்பி இருப்பதால் குடல் மற்றும் காலன் பகுதிகளை பாதுகாத்து செரிமானத்தை சிறந்த முறையில் செய்ய உதவுகிறது. எனவே, உங்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் சிவப்பு முள்ளங்கி ஒரு சிறந்த தீர்வு பொருளாகும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு பலமூட்டுதல்

இது நோய் எதிர்ப்பு சக்தி அதாவது ரத்த வெள்ளை அணுக்களை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது. சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா-கரோட்டின் உடல் ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகள் முறையாக செயல்பட உதவுகிறது.

தோலுக்கு பிரச்சனைகளை தீர்க்கும்

சிவப்பு முள்ளங்கியை சாறாக பிழிந்து தினமும் குடித்து வந்தால் வறண்ட சருமம் மற்றும் தழும்புகள் போன்றவற்றை தோலிலிருந்து விரட்ட முடியும். சிவப்பு முள்ளங்கி சாறுடன், கேரட்டை கலந்த அதன் சுவையைக் கூட்ட முடியும்.

இரத்த அழுத்தத்திற்கு மக்னீசியம்

நீங்கள் இரத்த அழுத்தத்தை பராமரிக்க விரும்பினால், சிவப்பு முள்ளங்கி உங்களுக்கான காய்கறிகளில் ஒன்று. இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் B ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன. மேலும், எலும்புகளுக்கும், இதயத்திற்கும் நன்மை செய்யும் தன்மையை மக்னீசியம் கொண்டிருக்கிறது.

இந்த ஆரோக்கிய பலன்களை பெற விரும்பினால் நாம் உணவில் சிவப்பு  முள்ளங்கியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.காய்கறி சூப்களிலும், சலாட்களிலும் அல்லது ரெய்தா தயாரிக்கவும் சிவப்பு முள்ளங்கி பயன்படுகிறது. இதன் சுவை சற்றே உவர்ப்பாக இருப்பதால், ரைய்தாவாக பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.

Check Also

உணவை எப்படி சாப்பிட வேண்டும் .

நம் வாழ்க்கையில் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது .இன்றைய உலகில் நாம் நன்றாக சாப்பிடுவது இல்லை அது நம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.