Friday , February 28 2020
Home / உணவே மருந்து / உணவுகள் / சுரைக்காயில் இருக்கும் 10 மருத்துவ நன்மைகள்

சுரைக்காயில் இருக்கும் 10 மருத்துவ நன்மைகள்

ஆதிமனிதன் முதலில் பயிர் செய்த காய்கறிகளுள் ஒன்றாக சுரைக்காய் இருக்கிறது. தற்பொழுது இந்த காய் எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிற ஓரு காயாக இருக்கிறது. சுவையான இந்த சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் இங்கு காணலாம்.

1.சுரைக்காய் கொண்டுள்ள சத்துக்கள்

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் B  ஆகியவை உள்ளன. மேலும் இதில் அதிக ஈரப்பதமும், குறைந்த அளவில் புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து மற்றும்  கார்போஹைடிரேடும் உள்ளன.

2.கோடைக்கால உடல்சூட்டிற்கு சுரைக்காய்

நமது நாட்டில் ஏற்படும் கோடை கால வெப்பத்தால் நமது உடல் சூடு  அதிகரிப்பதோடு மட்டுமல்லாது தோல் சம்பந்தமான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதற்கு சுரைக்காய் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும் மற்றும் வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு நமது தோலுக்கு பொலிவையும் கொடுக்கும்.

3.சிறுநீரக பிரச்சனை உள்ள நோயாளிகளின் கவனத்திற்கு

சுரைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது. எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் சிறுநீரம் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்.

4.நாவறட்சிக்கு சுரைக்காய்

நாவறட்சி ஆனது கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் அதிகம் சாப்பிட்டவர்களுக்கும், வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் பொதுவாகவே தோன்றும் பிரச்சனையாகும். இவர்கள் நாக்கு வறட்சி ஏற்படும் பொழுதெல்லாம் ஒரு கப் பச்சையான சுரைக்காய் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் நாவறட்சி நீங்கும். குறிப்பாக உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.

5.பித்தத்தைக் குறைக்க உதவும் சுரைக்காய்

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தால் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்கம் உண்டாகிறது. இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாகும். சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் பித்தம் விரைவிலேயே சமநிலைப்படும்.

6.கணினியில் வேலை செய்பவர்களின் கவனத்திற்கு

தற்காலங்களில் பலரும் கணினி சம்பந்தமான பணிகளில் இருப்பதால் கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய கண் குறைபாடுகளை போக்க சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

7.இரத்த அழுத்தம் குறைய

அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதை குறைக்க விரும்புபவர்கள் ஒரு துண்டு சுரைக்காயோடு விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து, வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் அதிக இரத்த அழுத்தம் குறைந்து கட்டுப்பாட்டிற்குள் வரும்.

8.தூக்கமின்மைக்கு  விடை தரும் சுரைக்காய்

இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்த்து இரவில் படுக்கப் போகும் போது தலைமுடிகளில் அதை விட்டு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேர்ந்து ஊறும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும். சுரைக்காயின் இலைகளைச் சமைத்து உண்டாலும் தூக்கமின்மை நீங்கும்

9.குடல் பிரச்சனைகளுக்கு தீர்வு

மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்  தினமும் ஒரு வேளை சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். வயிற்றில் ஏற்படும் பாதிப்புகள், மலச்சிக்கல் போன்றவை தீரும். குறிப்பாக மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக இருக்கிறது.

10.கல்லீரல் நலம் பேண

நமது உடலில் இருக்கும் கல்லீரலின் முக்கிய பணி உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்வது. இப்படியான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் நாம் சுரக்காய் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள் சாப்பிட்டு வர கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.

நமது உடலின் செரிமானம்,ரத்தம் மற்றும் நரம்பு மண்டலம்,கழிவு நீக்க மண்டலம் என அனைத்திற்கும் நன்மை அளிக்கும் சுரைக்காயை நம் உணவில் சேர்த்து பயன் பெறலாம்.

Check Also

வெள்ளை முள்ளங்கி

காய் வகைகளில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் ஒரு கிழங்கு வகை தான் இந்த வெள்ளை முள்ளங்கி. இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *