Home / உணவே மருந்து / துரித உணவு / துரித உணவின் ஆபத்து என்ன?

துரித உணவின் ஆபத்து என்ன?

துரித உணவின் ஆபத்து என்ன?

பரோட்டோ, நூடில்ஸ், பன், சமோசா,பீசா,குல்சா,பர்கர் போன்றவற்றில் நார்ச்சத்து என்பது இருக்காது. மேலும் துரித உணகளில் சேர்க்கப்படும் சாயம் மற்றும் அஜினோமோட்டோ போன்ற வேதிப் பொருட்கள் நமது குடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் கொலஸ்ட்ரால் கூடுவதற்கும் காரணமாக இருக்கிறது.

ஏற்படும் தீமைகள்

1. துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும் நீரழிவு நோய் ஏற்படும் .இதில் அலட்சியம் காட்டினால் உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

2. ஞாபக சக்தி குறைவு, கவனக்குறைவு, திட்டமிட்டு செயற்படும் திறன் குறைவு எனப் பல பிரச்சினைகள் ஏற்படும்.

3.தலைவலி, மனச்சோர்வு,உடற்சோர்வு, உடல் எடைஅதிகரிப்பு போன்ற வியாதிகளும் உண்டாகும்.

 4. உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை, வயிற்றுவலி,மூட்டுவலி நாக்கு வீங்குதல் ஏற்படுவதுடன் நரம்பு செல்களும் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும்.

5.இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிறுவயதிலேயே பருவமடைகின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு. எனினும் நம்முடைய உணவுப் பழக்கத்திற்கு அதில் முக்கிய இடம் உண்டு.பெண்கள் பருவமடைவதற்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் எனும் ஹோர்மோனை அதிகம் சுரக்கச் செய்வதில் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளுக்கு முக்கிய இடம் உண்டு.

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

Check Also

பதப்படுத்தப்பட்ட உணவில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள 9 வழிகள்

ஒட்டுமொத்த ஆரோக்கியமான உணவின் திறவுகோல் நீங்கள் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துவதாகும்.இது உங்கள் கலோரிகளில் 60% ஐ உருவாக்குகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.