துரித உணவும் ,உலக அரசியலும், உலகமயமாக்கல் கொள்கையும்! LPG

துரித உணவும் ,உலக அரசியலும், உலகமயமாக்கல் கொள்கையும்! LPG

உலகம் முழுவதும் உள்ள மக்களின் குறிப்பாக நமது மக்களின் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்து மேலை நாடுகளின் பன்னாட்டு துரித உணவுக் கம்பனிகள் துரித உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நம் மக்களை அந்த உணவுகளுக்கு அடிமைகளாக மாற்றி வருகின்றன.இதன்மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செய்யப்பட்ட தனிச்சுவையுடன் கூடிய உணவுவகைகள் அழிக்கப்பட்டு ஒரே மாதிரியான உணவு வகைகள் மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகின்றன.

இந்த துரித உணவுகளில் சுவை மட்டும் தான் அதிகமாக இருக்குமே தவிர உடல் நலத்திற்குத் தேவையான சத்துக்கள் இருப்பதே இல்லை. இவற்றில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருள்களினால் உடல் நலத்திற்கு தீமையை மட்டும் விளைவிக்கும்.

உலகமயமாக்கல் எனும் கொள்கையால் தர்சார்பு பொருளாதாரத்தை அழிக்க உருவாக்கப்பட்டதே இந்த துரித உணவு. உலகம் முழுவதும்  அதிக அளவில் பன்னாட்டுக் கம்பனிகள் துரித உணவு தயாரிப்பதில் ஈடுபட்டுவருகின்றன.

பெரும் வியாபாரமும் பணமும் இதில் கிடைப்பதால் மக்களின் உடல்நலத்தைப் பற்றிஅக்கறை காட்டுவது இல்லை. அவர்களின் நோக்கம் மிகச்சுவையான உணவு தயாரித்து அதிக பணத்தை சம்பாதிக்க. துரித உணவில் கலக்கப்படும் இரசாயணப் பொருட்கள் துரித உணவு விற்பனை நிலையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைககளிலும் MSG(Mono Sadium Glautamate ) என்னும் இரசாயன உப்பு கலக்கப்படுகிறது.

பீசா, பர்கர், பிறைட்றைஸ் ,நூடில்ஸ் போன்ற நிறைய உணவு வகைகளில் MSG சேர்க்கப்படுகின்றது. MSG இன் வாசனையும் வேதியியல் கூறுகளும் மூளையின் ஹைபோதலமஸ் பகுதியை தூண்டுகிறது. ஹைபோ தலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்ற திரவங்கள் சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இதனால் அதிகமாகவும் மீண்டும் மீண்டும் துரித உணவுகளை உண்ணவேண்டுமென்ற உணர்வும் நம்மிடம் ஏற்படுகிறது . இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் இந்த உணவுகளை உண்கின்றனர்.

◆ துரித உணவின் ஆபத்து என்ன?