துவரம் பருப்பில் இருக்கும் 6 முக்கிய நன்மைகள்

துவரம்பருப்பு நம் நாட்டின்  3500 ஆண்டுகளுக்கு முன்னர் முறையாக பயிர் செய்யப்பட்ட பயிரினம்  இன்று உலகம் முழுவதும் இந்த பயிர் பரவியிருக்கிறது

இந்த தாவரத்தில் மஞ்சள் நிற அல்லது பழுப்பு நிறத்தில் ஒரு பூக்கள் பூக்கின்றன இந்த பூக்களில் பச்சை நிற காய்களும் தோன்றுகின்றன இந்த காய்களில் 2 முதல் 8 விதைகள் இருக்கின்றன விதைகள் 6 முதல் 8 மில்லி மீட்டர் வரை  அரை இருக்கின்றன இந்த விதையில் தோன்றும் பருப்புதான் துவரம்பருப்பு.

1.துவரம்பருப்பில் இருக்கும் பல ஊட்டச்சத்துக்கள்.

B1 தயாமின்  

B9 ஃபோலேட்டுக்கள் அதிகளவும்,

B2 ரிபோஃப்ளோவின்,

B3 நியாசின்,

B5 பான்டாதெனிக் அமிலம்,

B6 பைரிடாக்ஸின்,

செம்புச்சத்து,

இரும்புச்சத்து,

மாங்கனீசு,

பாஸ்பரஸ்,

மெக்னீசியம்,

கால்சியம்,

செலீனியம்,

துத்தநாகம்,

பொட்டாசியம் .

கார்போஹைட்ரேட்டுகள்,

புரதச்சத்து,

நார்ச்சத்து போன்றவையும் காணப்படுகின்றன.

2.துவரம்பருப்பு இரத்த அழுத்தத்தை  சீராகுமா?

இரத்த அழுத்தத்தை சீராக பொட்டாசியம் அதிக அளவில் பயன்படுகிறது இந்த பொட்டாசியம் ரத்தக்குழாய் விரிப்பானாக செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது தினமும் உணவில் நீங்கள் துவரையை சேர்த்து வந்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

3.நல்ல செரிமானத்திற்கு துவரம்பருப்பு பயன்படுமா ?

நம் உணவு சரியாக செரிமானம் நன்றாக நடந்து வெளியேற நார்ச்சத்தும் தேவைப்படுகிறது   இந்த நார்ச்சத்து உணவில் இருந்தால் மலச்சிக்கல் வாந்தி வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் இல்லாமல் போகும் இந்த நார்ச்சத்து துவரம் பருப்பில் அதிகம் உள்ளது ஆகவே துவரம்பருப்பை பயன்படுத்துவதனால் செரிமான கோளாறுகள் வருவதில்லை.

4.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா துவரம் பருப்பு ?

வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஆகும் இந்த வைட்டமின் சி துவரம்பருப்பில் இருக்கின்றது இந்த துவரம்பருப்பை நாம் உணவில் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதோடு மட்டுமல்லாமல் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது இதனால் உடல் நலம் மேம்படும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக்கும்.

5.உடல் எடையை குறைக்க பயன்படும் துவரம்பருப்பு ?

துவரையில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கின்றன. மேலும் இந்த துவரம்பருப்பில் குறைந்த அளவு கலோரி இருக்கின்றது மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்தினை கொண்டுள்ளது இதில் உள்ள நார்ச்சத்து வயிறு நிரம்பிய நிலையில்  இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது

மட்டுமல்லாமல் உடல் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக நடைபெற இந்த துவரம்பருப்பு பெரிதும் உதவுகின்றது.

6.இதய நலத்திற்கு பயன்படுமா துவரம்பருப்பு?

துவரம் பருப்பில் இருக்கும் பொட்டாசியம் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்புச் சத்து இதய நலத்தை அதிகப்படுத்துகிறது பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கிறது நார்ச்சத்து கொழுப்பு சேராமல் தடுக்கின்றது எனவே துவரம்பருப்பு இதய நலத்திற்கு மிகவும் நல்லது.

இந்த துவரம்பருப்பை நாம் குழம்புகளில் பயன்படுத்துகின்றோம்  இதை தினமும் நம் உணவில் சேர்த்து வருவதால் எண்ணற்ற பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன நாம் பயன்படுத்தும் உணவு பொருள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற புரிதல் நமக்கு இருந்தால் ஆரோக்கியமான வாழ்வு நம்மிடம் நிலைக்கும்.

இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்படும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.