Breaking News
Home / உணவே மருந்து / தேங்காயில் இருக்கும் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு

தேங்காயில் இருக்கும் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு

வேர்,தண்டு,இலை,காய்,பழம் என அனைத்தும் பயன் தரக் கூடிய தென்னை   இந்தியா மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டலம் உள்ள இடங்களில்  வளரக்கூடியவை. தென்னிந்தியா குறிப்பாக தென் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்களின் சமையலில் தேங்காய் இன்றியமையாதது. தற்காலத்தில் இதன் அதிக பயன்களால் உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றிலிருந்து கிடைக்கும் பொருட்களை பற்றி காணலாம்.

இளநீர்

  1. தென்னை மரம் பூ பூத்து,காய்த்து ,வளர்ந்த நிலையில் கிடைப்பது இளநீர் எனப்படுகிறது. இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, ஜமைக்கா, பிரேசில் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கும் இளநீரே சிறந்தவையாக உள்ளது.
  2. இதில் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள புரதம் தாய்ப்பாலில் உள்ள புரதத்துக்கு இணையானது.
  3. இன்றைக்கு நம்மில் பெரும்பாலோரின் காலை உணவாக இளநீர் இருக்கிறது. ஆனால், ஒரு சிலருக்கு இதுலிள்ள அமிலத்தன்மையானது  காலையில் வெறும் வயிற்றில் பருகினால் வயிற்றில் புண் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
  4.  வாதம், பித்தம், கபம் போன்றவற்றை போக்கக்கூடியது. வெப்பத்தைத் தணிக்கக்கூடியது. வளரும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு, இளநீர் ஒரு அருமருந்து.
  5. உடலில் நீர்ச்சத்து குறையும்போது, இளநீரை உட்கொள்வதன்மூலம் நிவாரணம் கிடைக்கிறது. சில சமயங்களில் அவசர நிலையில் நரம்புகளின் மூலம் இளநீர் செலுத்தப்படுவதுண்டு.
  6. காலரா நோயாளிகளுக்கு, இளநீரின் வழுவழுப்புத்தன்மையும் உப்புத்தன்மையும் மிகவும் நல்லது. அம்மைநோய், வயிற்றுப்போக்கு காலங்களில் இளநீர் நல்ல மருந்தாகச் செயல்படும்.
  7. சிறுநீரகத்தை சுத்திகரிப்பதோடு விந்து எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும் இது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாகும். ரத்தத்தில் கலந்துள்ள நோய் ஏற்படுத்தும் கிருமிகளை அகற்றும் திறன் படைத்தது.

தேங்காய்

தென்னையின் பழமே தேங்காய் என்றழைகப்படுகிறது. இதைத் தெங்கம்பழம் என்றும் சிலர் சொல்வார்கள். இது மிகவும் கெட்டியாக இருப்பதால் தேங்காய் என்று அழைக்கிறார்கள்.

  1. தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலமானது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக்கூடியது. இதனால் உடல் எடையையும் குறைக்கிறது.
  2. மேலும் புரதம், மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை `பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் உள்ளது.
  3. தேங்காய்ப்பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப்புண்ணுக்கு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது. தேங்காயை அரைத்து அதனுடன் நாட்டுச்சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்கும்.

கொப்பரை

கொப்பரை என்பது தேங்காயின் முற்றிய நிலை ஆகும்.தேங்காய் அளவுக்கு மீறி முற்றியிருந்தால் அதன் உள்ளே இருக்கும் நீர் முற்றிலும் வற்றிவிடும். நீர் முழுவதும் வற்றா விட்டாலும், அதை உடைத்து வெயிலில் உலர்த்தி, கொப்பரை ஆக்குவதும் உண்டு.

அந்தக் கொப்பரையை செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுக்கப்படுகிறது. கொப்பரை ஆண்மையை பெருக்குவதோடு அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தாமதப்படுத்த உதவும் மற்றும் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், வாரத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து, ஊற வைத்து குளித்து வந்தால் பெண்களின் கூந்தல் வேர்க்கால்கள் பலமடைவதோடு, பொடுகுத்தொல்லை நீங்கும்.

முகம் பொலிவுப் பெற உதவும். கேரளத்துப் பெண்கள் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதோடு அன்றாட சமையலிலும் தேங்காய் எண்ணெயையே பயன்படுத்துகின்றனர்.

நீரா எனும் பானம்

தேங்காயிலிருந்து நீரா என்ற பானம் தயாரிக்கப்படுகிறது. நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட ஒரு பானம் ஆகும். இது இளநீருக்கு முன்னர் மலராத தென்னம்பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானம். ஆல்கஹால் இல்லாததால் உடல்நலனுக்கு ஊட்டமளிக்கும் நல்லதொரு பானமாகும்.

தென்னையில் இருந்து இன்னும் ஏராளமான பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன. தென்னை விசிறி, குடிசை போட பயன்படும் தென்னை ஓலையால் பின்னப்படும் கிடுகு, தென்னை மட்டை, தேங்காய் ஓடு, தேங்காய் நார்க்கழிவு என தென்னையின் பல பாகங்களும் பல வழிகளில் மனிதனுக்குப் பயன்பட்டு வருகின்றன.

Check Also

weight loss tips

கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ  | NEXT DAY 360

உடல் எடையை பற்றி அன்றாட வாழ்வில் கவலைப்படும் ஒவ்வொருவருக்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும். எடையை குறைக்க பல வழிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.