Breaking News
Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / தொற்று நோய்களை விட தொற்றாத நோய்களால் பாதிப்பு அதிகம்( தொற்றாத நோய் கேன்சர் இதய நோய் உடல் பருமன்)

தொற்று நோய்களை விட தொற்றாத நோய்களால் பாதிப்பு அதிகம்( தொற்றாத நோய் கேன்சர் இதய நோய் உடல் பருமன்)

உணவே மருந்து தமிழ்

மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது.

பல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், தொற்றுநோய்த் தடுப்புக்கும், தொற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகளால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஆனால் தொற்றாத நோய்கள் எடுத்துக்காட்டாக இதய நோய்,நீரிழிவு நோய்,உடல் பருமன் போன்றவற்றால் இன்றளவிலும் இறப்புகள் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, தொற்றாத நோய்களைப் பற்றி தெரிந்து கொண்டு, வருமுன் காப்பதே சிறந்தது எனும் கருத்தின் அடிப்படையில் நலமான வாழ்வை வாழ்வோம்.

வாழ்க்கையில் எளிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் புற்றுநோய்கள் போன்றவற்றை பின்வரும் செயற்பாடுகளால் கட்டுப்படுத்தலாம்.

 1. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஏற்படுத்துதல்
 2. நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல்
 3. புகைத்தலை நிறுத்திக் கொள்ளுதல்
 4. மதுப்பழக்கத்தை நிறுத்துதல்

நீரிழிவைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வழிமுறைகள்

 1. சமநிலை உணவை சுவைக்க வேண்டும்
 2. மூன்று நேர பிரதான உணவு மற்றும் இடையே இருமுறை ஆரோகியமனா நொறுக்குத்தீனிகள் உண்ண வேண்டும்
 3. சாப்பாட்டை தவறாது உண்ணுதல்
 4. அதிகளவு இனிப்பான மற்றும் எண்ணெய்த் தன்மையான உணவுகளை உண்ணுவதை தவிர்த்து விட வேண்டும்.
 5. ஒவ்வொரு உணவின் பின்னரும் பழங்களைச் சாப்பிடுங்கள்.

உயர் ரத்த அழுத்தம்

ரத்த ஓட்ட அழுத்தத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பு காணப்படல் உயர் ரத்த  அழுத்தமாகும். இளைஞர் ஒருவருக்கு 120 / 80mm Hg அழுத்தத்தை விட குறைவாக காணப்பட வேண்டும். ஒவ்வொரு 20/10 mm Hg அழுத்த அதிகரிப்புக்கும் இதயக்குழாய் நோய்கள் ஏற்படும் சாத்தியக் கூறு இரு மடங்காக உள்ளது.மேலும் இந்த நோய் ஏனைய தொற்றா நோய்களுடனும் தொடர்புடையது.

உயர் ரத்த அழுத்தம் அறிகுறிகள் வழக்கமற்ற தலைவலி,பார்த்தலில் தொந்தரவுகள்,மயக்கம் ஏற்படுதல்,வியர்த்தல்,குழப்பம் போன்றவை ஆகும்.

 1. குருதி அழுத்தத்தை கட்டுப்படுத்த சில குறிப்புகள்
 2. வழக்கமாக ரத்த அழுத்தத்தை சோதனை செய்தல்
 3. உணவில் குறைவான உப்பு சேர்த்தல்.
 4. புகையிலையை புகைத்தல் மெல்லுதல் மற்றும் மது அருந்தலை தவிர்த்தல்.
 5. தினமும் 30-60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தல்
 6. ஆரோக்கியமான உடல் எடையைப் பேணுதல்.

புற்று நோய்கள்

அசாதாரண மற்றும் கட்டுப்பாடற்ற செல்களின் பிரிவுகள் உடலில் ஏற்படுவதால் புற்று நோய்கள் உண்டாகின்றது. இவை உடலின் எந்த உறுப்புகளிலும் ஏற்படலாம். பொது வாக பெண்களின் மார்பகம் மற்றும் கருப்பை வாய, தொண்டை, உணவு குழாய், சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் தோல் போன்ற இடங்களில் புற்று நோய்கள் காணப்படுகின்றன. புகையிலை, மது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், குறைந்த உடல் செயற்பாடுகள், அதிக உடல் பருமன் மற்றும் மன உளைச்சல் போன்ற காரணிகளே புற்றுநோய்  ஏற்படுத்துபவையாகும்

புற்றுநோய்களை வராது தடுக்கும் வழிமுறைகள்

 1. புகையிலையை புகைத்தல் மற்றும் மெல்லுதலை தவிருங்கள்
 2. ஆரோக்கியமான நிறையைப் பேணுங்கள்
 3. தினமும் குறைந்தது 30 நிமிட உடல் செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்
 4. மன அழுத்தங்களை தவிருங்கள்
 5. தாராளமாக நீர் அருந்துங்கள்

Check Also

வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உடம்பில் வேகமாக அதிகரிக்க

உடலில் இரத்த அணுக்களை வேகமாக அதிகரிக்க Simple Tips | Increase White & Red Blood Cells Naturally

வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உடம்பில் வேகமாக அதிகரிக்க உதவும் கீழாநெல்லி. கீழாநெல்லியை இந்த காணொளிகள் கூறியதுபோல முறையாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.