நெல்லிக்காய் சாறு

வைட்டமின் சி பற்றாக்குறையால் ஏற்படும் நோய் தான் ஸ்கர்வி. இதனால் நாம் சோர்வாக, ஒரு மந்தமான நிலையில் இருப்போம். இது நமது உடலின் எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை பாதித்து ஒட்டு மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடுகிறது. மேலும் இதன் பற்றாக்குறையால் அதிக இரத்த அழுத்தம், பித்தப்பை பிரச்சினைகள், பக்கவாதம், சில வகை புற்றுநோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினைகளும் நம் உடலில் ஏற்படுகின்றன. எனவே, அனைவருக்கும் ஏற்றதாகவும்,விலை குறைவாகவும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ள நெல்லிக்காயை சாதமாக, ஊறுகாயாக, கனியாக,பானமாக எடுத்துக்கொண்டால் வைட்டமின் சி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்.பின்வரும் காணொளியில் நெல்லிக்காய் சாறு எவ்வாறு தயாரிக்கலாம் என்று கண்டு பயன் பெறலாம்.