Friday , February 28 2020
Home / உணவே மருந்து / உணவு பழக்கம் / நெல் ரகங்கள் , மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

நெல் ரகங்கள் , மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

நம் முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் படிப்படியாக மறையத் தொடங்கியதால், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் வளரும் உணவு தானியங்களால், மண் வளம் பாதிக்கப்பட்டு விளை நிலங்கள் பாலைவனங்களாக மாறிவிட்டன,

இதை உண்பவர்களும் விதவிதமான நோய்களுடன் உலவி வருகின்றனர். இச்சூழலில் நாம் தற்போது பயன்படுத்திவரும் அரிசி ரகங்களை விட பல மடங்கு புரதச்சத்து, நார்ச்சத்து பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ளன.அவற்றை பற்றி இங்கு காண்போம்.

 • பூங்கார் : கர்பிணிப் பெண்களுக்குப் பூங்கார் அரிசியைக் கொண்டு பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.மேலும் இதில் துத்தநாக சத்து உள்ளது.இது உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
 • சிவப்பு கவுணி : இதயத்தை பலப்படுத்தும், பல் அலகுகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும், மூட்டு வலியை நிவர்த்தி செய்யும்.
 • மாப்பிள்ளைச்சம்பா : சத்துள்ள மாப்பிள்ளைச்சம்பா நீராகாரத்தை சாப்பிட்டால் இளவட்டக் கல்லைக் தலைக்கு மேல் சுலபமாகத் தூக்க முடியும். நரம்புகளை வலுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும்.
 • சண்டிகார் : தீராத நோய்களை தீர்க்கும் தன்மையுடையது. உடல் வலிமையை கொடுக்கும். முறுக்கேற்றும் நரம்புகளை பலப்படுத்தும்.

 

 • கருங்குறுவை : ரண குஷ்டத்தையும், சில விஷத்தையும் நீக்கும்.
 • கருத்தக்கார் : வெண்குஷ்டத்தை போக்கும் காடி தயாரிப்பதற்கு பயன்படுகிறது. பாதரசத்தை முறித்து மருந்து செய்வதற்கு பயன்படுகிறது.
 • குடவாழை : சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், அஜீரண கோளாறை குணப்படுத்தும். நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மிகவும் ஏற்றது.
 • கருங்குருவை : விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.
 • காட்டுயானம் : ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். டைப் 2 சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.

 

 • அன்னமழகி : மிகவும் இனிப்பு சுவையுள்ள அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.
 • இலுப்பைப்பூச்சம்பா : பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை உண்டாக்கும்.
 • கல்லுண்டைச்சம்பா : இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளத்தையும் உண்டாக்கும்.
 • காடைச்சம்பா : இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.

 

 • காளான் சம்பா : உடலுக்கு உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.
 • கிச்சிலிச்சம்பா : பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.
 • குறுஞ்சம்பா : பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயை நீக்கும்.
 • கைவரை சம்பா : உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.
 • சீதாபோகம் : உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.
 • புழுகுச்சம்பா : இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.
 • மணக்கத்தை : தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.
 • ணிச்சம்பா : அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிக சுகத்தை உண்டாக்கும்.

 

 • மல்லிகை சம்பா : நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.
 • மிளகு சம்பா :உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.
 • மைச்சம்பா : வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.
 • வாலான் அரிசி : மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.
 • மூங்கில் அரிசி : மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்
 • பழைய அரிசி : சிறுவர்கள், முதியோர்களுக்கு மிகவும் உகந்தது. பசியும், உடலுக்கு குளிர்ச்சியும் உண்டாகும். சில நோயும், கபமும் குறையும்.

 

 • கார் அரிசி : கார் அரிசியை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும்.உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மென்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.
 • குண்டுசம்பாஅரிசி :இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.
 • குன்றுமணிச்சம்பா அரிசி :வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.
 • சீரகச்சம்பா அரிசி : சிறுவாத நோய்களைக் குணமாக்கும், இனிப்புள்ளது. சாப்பிட தூண்டும்.
 • கோரைச்சம்பா அரிசி :வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும். குளிர்ச்சி தரும். உட்சூடு, நமைச்சல், அதிமூத்திரம் இவைகளை நீக்கும்.

 

 • ஈர்க்கு சம்பா : சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும். இதையறிந்திருந்த நம் முன்னோர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு நோயற்ற வாழ்க்கையை ருசித்து வந்தனர்.
 • கைகுத்தல் புழுங்கல் அரிசி :குறைந்த கிளைசெமிக் தன்மை கொண்டது. அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் தடுக்கும். குழந்தைகள், வாத நோய் இருப்பவர்கள், அரும்பத்தியம் இருப்பவர்களுக்கு உதவும். புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.
 • கருப்பு கவுணி அரிசி :புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
 • குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும்.

 

 • பிசினி அரிசி : மாதவிடாய் காலங்களில் வரும் இடுப்பு வலி சரியாகும்.
 • சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
 • வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
 • வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும்..

இன்னும் பல உண்டு பகிர்ந்து கொள்ளுங்கள்

Check Also

வெள்ளை முள்ளங்கி

காய் வகைகளில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் ஒரு கிழங்கு வகை தான் இந்த வெள்ளை முள்ளங்கி. இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *