பரங்கிக்காயில் உள்ள நன்மைகள்

பரங்கிக்காய் மஞ்சள் நிறத்தில் இனிப்பு சுவையுடன் இருக்கும் ஒரு காய் இதற்கு மஞ்சள் பூசணி சர்க்கரை பூசணி  என்று அழைப்பார்கள் பெரும்பாலும் இது கிராமங்களில் விலைகின்ற ஒரு காய் நகரங்களில் அதிகமாக இது பயன்படுவதாக தெரியவில்லை ஆனால் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

100 கிராம் பரங்கிக்காயில் 26 கலோரிகள் கொண்டது இதில் கொழுப்பு இல்லவே இல்லை செரிமானத்துக்கான நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் தாதுச் சத்து அதிகமாகவே உள்ளது வைட்டமின் ஏ சி மற்றும் இ ஆகியவை அதிகமாக இருக்கின்றன.

முக்கியமாக வெண்பூசணியில் தண்டுப்பகுதியை முறையற்ற மாதவிலக்கு சீர் செய்யவும் சருமத்தில் ஏற்படும் தழும்புகளை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன அதேபோல் வேர்ப்பகுதியை மஞ்சள்காமாலை சிறுநீர்ப் பாதை எரிச்சல் சீதபேதி ஆகியவற்றை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

பரங்கிக்காயின் விதைகளில் பல மருத்துவ குணங்களுக்கு தேவைப்படுகின்றன குறிப்பாக சிறுநீரைப் பெருக்கக்கூடிய திறன் பரங்கிக்காயின் விதைகளை உண்டு நாடா புழு போன்ற வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றும் தன்மையும் கொண்டது.

பரங்கிச் சாறின் நன்மைகளைப் பார்த்தால் ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய அடைப்பை போக்கிவிடும் இதனால் மாரடைப்பு உட்பட பல இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன

பரங்கிச் சாறு லேசான மயக்கமூட்டும் தன்மையை கொண்டுள்ளதால் தூக்கமின்மையை போக்கி விடும் மற்றும் இந்த பரங்கி சாறு சிறுநீரக பாதையை சரி செய்து சிறுநீரகத்தையும் சரிசெய்ய உதவுகின்றது.

உடற்பயிற்சியில் ஏற்பட்ட பிறகு எலக்ட்ரோலைட்டை சரிசெய்ய அதிகப்படியாக பொட்டாசியம் தேவைப்படும் இந்த பொட்டாசியம் வாழைப்பழத்தை விட பரங்கி காயில் அதிகம் இருப்பது நம்மை  சுறுசுறுப்புடன் வைக்க இந்த பரங்கிக்காய் மிகவும் அதிக அளவில் தேவைப்படுகிறது.

சருமம் பளபளப்பு என்று இருப்பதற்கு காரணமான வைட்டமின் ஈ துத்தநாகம் மற்றும் மக்னீசியம் இதில் அதிகம் உள்ளது நமது சருமத்திற்கு தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் பரங்கிக்காயில் இருக்கின்றது மேலும் பரங்கிக்காயை நம் உணவோடு சேர்த்துக் கொள்வதனால்  சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் அதற்கும் பரங்கிக்காய் ஜூஸ் பயன்படுத்தப்படுகிறது  வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ நம் உணவில் இதை பயன்படுத்தி வந்தால் நம்

ஆரோக்கியம் மேம்படும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பயன்படும் என்று நினைத்தீர்கள் என்றால் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்