Breaking News
Home / உணவே மருந்து / உணவுகள் / பாசிப்பயறின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

பாசிப்பயறின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

பாசிப்பயறு அதிக அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரசைக் கொண்டது. மேலும் புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. இப்பயறானது கண்கள், முடி, நகங்கள், கல்லீரல், சருமம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.

 • கர்ப்பிணிகளுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். இது எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும்.
 • குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு. வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
 • சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்து, பின் அந்த தண்ணீரை அருந்தக் கொடுக்கலாம்.
 • காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

 

 • மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தி வந்தால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது மிக சிறந்த மருந்தாகும்.
 • பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்.
 • குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை படிப்படியாக நீங்கும்.

 

 • இந்தப் பாசிப்பயறில் காணப்படும் புரதச் சத்தானது உடலில் இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடிய என்சைம்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன. எனவே பாசிபயறினை அடிக்கடி உணவில் சேர்த்து இரத்த அழுத்தத்தைச் சீராக்கலாம்.
 • பக்கவாதம், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு கெட்ட கொழுப்புகளின் செயல்பாடுகள் முக்கிய காரணமாகும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜென்டுகளான வெர்டிக்சின் மற்றும் ஐசோ வெர்டிக்சின் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்வதோடு இரத்த குழாய்களில் உண்டாகும் காயங்களைச் சரிசெய்வதோடு வீக்கத்தையும் குறைக்கின்றன.

 

 • பாசி பயறில் உள்ள புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து பசியை உண்டாக்கும் நொதியான ஹெர்லினின் செயல்பாட்டினை தடைசெய்கிறது. மேலும் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. எனவே பாசி பயறினை உண்டு ஆரோக்கிய எடை இழப்பினைப் பெறலாம்.
 • பாசி பயறில் பீனாலிக் அமிலம், ப்ளவனாய்டுகள், காபிக் அமிலம், சின்னமிக் அமிலம் உள்ளிட்ட ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் உள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிஜெனட்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்து நீண்டகால நோய்களான சர்க்கரை நோய், இதயநோய், புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கக் கூடியது.

Check Also

weight loss tips

கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ  | NEXT DAY 360

உடல் எடையை பற்றி அன்றாட வாழ்வில் கவலைப்படும் ஒவ்வொருவருக்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும். எடையை குறைக்க பல வழிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.