மன அழுத்தம் பாதிப்பும் தீர்வும்

உணவே மருந்து தமிழ்

மன அழுத்தம் அற்ற வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலையும்  அதிகரிக்கும்.மேலும் நோய்களை உண்டாக்கக்கூடிய உடல் அல்லது மனரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல், இரசாயன அல்லது மனவியல் காரணிகளை மன அழுத்தம் என்று குறிப்பிடலாம் . அதிர்ச்சி, நோய்தொற்று, விஷம், உடல்நலக் குறைபாடு, காயங்கள் போன்றவற்றை உடலியல் மற்றும் இரசாயன காரணிகளாக கூறலாம்.

மன அழுத்தம் ஏற்படுத்தும் முக்கிய காரணங்கள்

  • வாழ்வியல் அழுத்தம்
  • உள்நிலை அழுத்தம்
  • சுற்றுச்சூழல் அழுத்தம்
  • களைப்பு மற்றும் அதிக வேலைப்பளு

மன அழுத்தத்தை கண்டறிய உதவும் அறிகுறிகள்

  1. முழுமையான தூக்கம் பாதிக்கப்படும்
  2. பசியின்மை
  3. குறைவான கவனம் மற்றும் ஞாபகமறதி
  4. தங்களது குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள்
  5. தேவையில்லாத கோபம்
  6. வன்முறை அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள்
  7. மனவியல் ரீதியான வெளிப்பாடுகள்
  8. மது அல்லது பிற போதைப்பொருள்களுக்கு அடிமையாதல்
  9. எபோழுதும் படபடப்பான நடவடிக்கைகள்

மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள்

  1. படபடப்பு ஏற்படுவதால் இதய துடிப்பு அதிகரிக்கும்.
  2. மேலோட்டமான மூச்சு வாங்குதல்
  3. நடுக்கம்
  4. குளிர் அல்லது வேர்த்து வழிதல்
  5. புருவப்பகுதி ஈரமானதாக இருக்கும்
  6. தசைகள் மற்றும் வயிற்றுப்பகுதி தசைகள் இறுகுதல், முறுக்கிய கைகள், பற்களை கடித்தல்
  7. வயிற்று உபாதைகள்
  8. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  9. முடி கொட்டுதல்
  10. கவனம் செலுத்துவதில் சிரமம்
  11. முடிவெடுப்பதில் திறமை குறைதல்
  12. தன்னம்பிக்கையை இழத்தல்
  13. அடக்க முடியாத ஆசைகள்
  14. தேவையற்ற கவலைகள், படபடப்பு
  15. மிக அதிக பயம்
  16. குணாதிசயத்தில் அடிக்கடி மாற்றங்கள்
  17. அதிகமாக புகைபிடித்தல்
  18. அதிகமாக மது அல்லது போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாதல்
  19. ஞாபக மறதி அதிகமாதல்
  20. விபத்துக்குள்ளாதல்
  21. முரட்டுத்தனமான வன்முறை செயல்களுக்கு தூண்டப்படுதல்

மன அழுத்தத்தை சமாளிக்கும் ஆரோக்கியமான வழிமுறைகளும் உள்ளன, ஆனால் அவை மாற்றங்கள் மூலம் மட்டுமே சாத்தியம். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அல்லது அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய ஏதாவது ஒன்றை நாம் மாற்ற வேண்டும். மன அழுத்த வகைகளை அறிந்து, அவற்றை உண்டாக்கும் காரணிகளையும் அறிந்து, மன அழுத்தம் மற்றும் அதன் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

இந்த தகவலை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்