மோரிங்கா டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் | Moringa tea Benefits in Tamil

முருங்கை கீரையில் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. முருங்கை இலையில் இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் சாதாரண கீரையில் இருப்பதை விட மூன்று மடங்கு இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. அதுபோல் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், பி6, சி மற்றும் மெக்னீசியம், பீட்டா கரோட்டீன் ஆகியவையும் இருக்கிறது. தினமும் ஒரு கப் மோரிங்கா டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.