வெற்றிலையில் இருக்கும் 12 முக்கிய மருத்துவ குணங்கள்

1. மூலிகை மருத்துவத்தில் வெற்றிலையுடன் மிளகு சேர்த்து உண்டால்,அது நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு உருண்டைகளை சேர்த்து மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.

2. மேலும் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள்  குணமாகுவதோடு, வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது.

3.வெற்றிலை உண்பதால் வயிற்றில் சளி உடைய பொருளை அதிகரிக்கும். இதனால் அதிக அமிலத்தன்மை ஏற்படாமல் தடுக்கப்படும். இதனால் காஸ்ட்ரிக்  அமிலத்தின் தீய தாக்கங்களில் இருந்து வயிற்றின் உட்புறம்  பாதுகாக்கப்படும்.

4.வெற்றிலையை மெல்ல ஆரம்பித்த உடனேயே வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் உங்கள் வாய் நீங்கள் உண்ட உணவை செரிக்க சொல்லி வயிற்றுக்கு செய்தி அனுப்பும். இதனால் செரிமானம் சிறப்பாக செயல்பட தொடங்கும். வயிற்றில் இருந்து நச்சுக்களை நீக்கவும் இது பயன்படுகிறது.

5.மஞ்சள் நிறத்தில் அல்லது அழுகிய நிலையில் உள்ள வெற்றிலையை தவிர்த்து விடுவது நல்லது.ஏனெனில் அது வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

6.தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலை வாயுவை வெளித்தள்ள கூடியது. நுண்கிருமிகளை போக்கி நோய்கள் வராமல் தடுக்கிறது.

7.இரண்டு தேக்கரண்டி வெற்றிலை சாறுடன், அரை தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்.மேலும் மூளை பலம் பெறுவதுடன் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

8.மூச்சுதிணறல், நெஞ்சக சளியை போக்கும் மேல்பூச்சு மருந்தில் வெற்றிலை பயன்படுகிறது. பாத்திரத்தில் சிறிது கடுகு எண்ணெய்யை சூடுபடுத்தவும். இதில் வெற்றிலைகளை வைத்து லேசாக வதக்கவும். இந்த வெற்றிலைகளை இளஞ்சூட்டில் மார்பில் வைக்கும்போது நெஞ்சக சளி கரைந்து வெளியேறும்.

9.ஐந்து வெற்றிலைகளை துண்டுகளாக்கி, அதனுடன் கால் தேக்கரண்டிக்கு சற்று குறைவாக உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்து வர யானைக்கால் நோய், விரைவீக்கம் போன்றவை சரியாகும். யானைக்கால் நோயில் காலில் வரும் வீக்கத்தை வெற்றிலை தேநீர் குறைக்கும். விரைவாதம் ஏற்படுவதால் நெறிக்கட்டி காய்ச்சல் வரும். இதை தடுக்கவும் இந்த தேநீர் பயன்படுகிறது.

10 .பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய்யுடன், நீர்விடாமல் அரைத்த வெற்றிலை பசையை சேர்த்து, பத்தாக போட்டுவர கீழ்வாதம், விரைவாதம் சரியாகும்.

11.வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.

12.நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால், காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகிறது.