அன்னாசி பழத்தின் முக்கிய நன்மைகள்

எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசிப்பழமானது பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களைத் தாயகமாகக் கொண்டது.தற்போது அன்னாச்சி எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. எந்த ஒரு பழத்தையும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும். சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடையைப் பெறலாம்.எந்த ஒரு பொருளிலும் நிறைய நன்மைகள் இருந்தாலும் சிறிய அளவில் தீமையும் இருக்கத்தான் செய்கிறது.அது போல் இதிலும் உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல் நலத்தை பாதிக்கும் பின்வரும் காரணிகளும் அடங்கியுள்ளன.இவற்றை தெரிந்து கொண்டு பின்னர் உண்டால் நன்மையே.

அன்னாசி பழத்தில் உள்ள தீமைகள்

  • அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது. எனவே, இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல.
  • அன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
  • பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.
  • அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
  • அன்னாசி பழம் சாப்பிடுவதால் சிலருக்கு லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது.
  • கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள்

அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன், ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின், தையாமின், வைட்டமின் பி-5, பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது.

அன்னாசி பழத்தில் உள்ள நன்மைகள்

  • அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும்.
  • அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும்.
  • இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.
  • அன்னாசிப்பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும்.
  • பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.
  • மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் இவைகள் உடலைப் பாதிக்காமல் தடுக்கிறது அன்னாசி.
  • இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.
  • விட்டமின் A,B,C சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சத்தி அதிகம் உள்ள அன்னாச்சிப் பழத்தை சாப்பிட்டால் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
  • அன்னாச்சி இலைசாறு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
  • அன்னாச்சிப்பழச் சாறுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, வாய்ப்புண், முளைக்கோளறு ஞாபகசத்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும்.
  • மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாச்சிப் பழச்சாற்றை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.
  • புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது.
  • தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
  • இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
  • இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது.
  • நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் வற்றல்களாக செய்து வைத்து தினமும் இரவில் ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.
  • அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும்.
  • அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.
  • இன்றைக்கும் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒற்றை தலைவலிக்கு அன்னாசிப்பழம் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. அதற்காக 40 நாட்கள் அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
  • மேலும் மூளைக் கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்றவையும் குணமாகும்.
  • தொடர்ந்து விக்கல் வந்துகொண்டே இருப்பவர்கள், ஒரு சங்கு அளவுக்கு அன்னாசிப்பழச் சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும்.
  • அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் பொருள் உள்ளது. இது உங்கள் மூட்டுக்களில் தேய்மானம் ஏற்படும்போது ஏற்படும் வலியினை கட்டுப்படுத்த உதவுகின்றது. மேலும் இந்த ப்ரோமெலைன் நெறைய ஆரோக்கிய சிறப்புகளை கொண்டது.
  • அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது. எனவே உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற அன்னாசி பலத்தினை உட்கொண்டு வரவும்.
  • அன்னாசி பழத்தில் அதிக அளவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. கால்சியம் நிறைந்த உணவுகளை இருந்து கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது.அன்னாசி பழத்தில் அதிக அளவு மெக்னீசியம் நிறைந்துள்ளது.
  • இன்றைய நவீன உலகில் பலபேர் உயர் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுகின்றனர். இரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மிக மிக முக்கியம். அன்னாசியில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து உள்ளது.
  • அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் எ உங்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். எனவே அன்னாசி பழத்தினை தினமும் உட்கொண்டு வாருங்கள்.