இயற்கையை விட்டு விலகி வாழ்வதால் ஏற்படும் தீமைகள்

உணவே மருந்து தமிழ்

இயற்கை என்பது நிலம், நீர்,வாயு, நெருப்பு,ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த ஐந்தும் இன்றி எந்த உயிரினாலும் வாழ்வது என்பது நடக்காத காரியம் ஆகும். எனவே, நிலத்தை செயற்கை உரங்களாலும்,நீரை செயற்கை கழிவுகளாலும்,வாயு மற்றும் ஆகாயத்தை நாம் ஏற்படுத்தும் புகையினாலும்,புவி வெப்பமயமாதலால் நெருப்பையும் உருவாக்கி இயற்கையை நாம் மாசுபடுத்தி, பின்னர் அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த செயலின் மூலம் நாம் இயற்கையை விட்டு விலகுகிறோம் என்பதை காட்டிலும் நம்மையே நாம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறுவது சரியாகும்.

இயற்கை மாசுபாட்டினால் வரும் பாதிப்புகள்

நீர் மாசுபாட்டினால்,

  • மனிதர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.(எ.கா: பாக்டீரியா, வைரஸ் மற்றும் புழுக்களால் வரும் நோய்கள்)
  • நீர் வாழ் உயிரினங்கள் இறப்புக்குள்ளாகின்றன.
  • குடிநீராகவும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாது
  • தோல் புற்றுநோய்கள் ஏற்படும், நரம்பு மண்டலம், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படுகின்றன.
  • ஏரி, நீர்த்தேக்கத் தொட்டிகளில் வண்டல்கள் மற்றும் மணல் துகள்கள் படிவதனால் நீரின் கொள்ளளவு குறைகின்றது
  • விவசாயத்தில் மகசூல் குறைகின்றது.

நில மாசுபாட்டினால்,

  • இரத்த புற்றுநோயை உள்ளடக்கிய புற்றுநோய்களுக்கு காரணமாக அமைதல்
  • குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பாக அமைதல்
  • பாதரசமானது சிறுநீரக சேதத்தையும், சைக்கலோடைனஸ் கல்லீரலில் நச்சுத்தன்மையையும் அதிகரிக்கிறது
  • நரம்பு தசையில் அடைப்பு ஏற்படுதல் மற்றும் மத்திய நரம்பு இயக்கத்தில் ஒருவித பதற்ற அழுத்தம் ஏற்படுதல்
  • தலைவலி, குமட்டல், களைப்பு, கண் எரிச்சல் மற்றும் தோல் நோய் ஏற்படுதல் மற்றவை
  • பாதிக்கப்பட்ட மண்ணுடன் நேரடியாக (பூங்கா, பள்ளி போன்றவற்றை பயன்படுத்துதல்) அல்லது மறைமுகமாக (ஆவியாகுதல்) போன்றவற்றுடன் தொடர்பு.

காற்று மாசுபாட்டினால்,

  • கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல் மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களை காற்று மாசுபாடு உண்டாக்குகிறது
  • தொழிற்சாலைகளும், வாகனங்களும் ஏற்படுத்தும் புகையினால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் முதலியவை பாதிக்கப்படுகின்றன.
  • அமில மழை,ஓசோன் படலம் பாதிப்பு முதலியன.

ஆகாய மாசுபாட்டினால்,

இன்றைய நவீன யுகத்தில் சாட்டிலைட்டுகள், விண் கேமிராக்கள் என்று அதிக அளவிலான சமிங்கை தரும் பொருட்கள் அவ்வப்போது ஏவப்படுகிறது இவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செயலிழந்துவிடுகின்றன மேலும் இந்த விண்கலங்கள் வானவெளியில் அப்படியே மிதந்து வருவதால் புதிய செயற்கை கோள்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் வான் மண்டலத்தில் குப்பைகளாக சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கின்றன. இந்த வின்வெளி குப்பைகள் புவியின் ஈர்ப்பு மையத்தை தொடும்போது அவை நிலத்தை நோக்கி ரசாயன குண்டுகள் போல வேகமாக வந்து வெடிக்கின்றன. இவைகளின் வெடிப்புகளால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அங்கு கதிரியக்கம் வெளிப்பட்டு மக்களின் உடலில் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றன.

நெருப்பு மாசுபாட்டினால்,

நெருப்பு மாசுபடுதலை இங்கு நாம் தட்ப வெப்ப நிலை மாசுபடுதலை மையமாக வைத்து கூற இயலும் அதாவது புவி நிலப்பரப்பில் நிலம், நீர், காற்று ஆகியன மாசுபடுவதால் இந்த புவியின் தட்பவெப்ப சீதோஷ்ணத்தில் குளறுபடியை ஏற்படுத்தி அண்டார்டிகா போன்ற பனிப்பிரதேசங்களை உருகச் செய்கிறது இதனால் கடல் சீற்றங்கள் ஏற்படுவது மட்டுமின்றி சிறிய குட்டித் தீவுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. மேலும் உலக வெப்ப மயமாதல் போன்ற பேரழிவுகளுக்கு இந்த நெருப்பு மாசுபடுதலும் ஒருவகையில் காரணமாக அமைந்துவிடுகிறது.
இந்த மாதிரியான அழிவிற்கு ஒரே தீர்வான இயற்கை வாழ்க்கை முறையே ஆகும்.அதைப் பற்றிய நன்மைகள் பின்வருமாறு

இயற்கை வாழ்க்கை முறை

இயற்கை எவ்வளவு பவித்திரமானதோ அதே போன்றே இயற்கையிலே பிறந்து இயற்கையுடன் வளர்ந்து இயற்கையிலே கலந்து போகும் நம் தேகமும் அந்த அளவு பவித்திரமானது.இதை அறிந்த நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி வாழக் கற்றுக்கொண்டார்கள். அதனாலே நம் முன்னோர்களால் நோய்நொடி இல்லாமல் வாழமுடிந்தது. அந்த இயற்கையோடு இனிமையாக வாழும் கலைகளை வாழ்க்கை முறைகளாக வகுத்து வைத்தார்கள்.

நாம் பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு நமது முன்னோர்கள் சொல்லி வைத்த நல்ல விஷயங்களை எல்லாம் ஒன்றொன்றாக தொலைத்து கொண்டிருக்கிறோம்.
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இயற்கையையே ஆதாரமாகக்கொண்டு வாழ்கின்றன. அவைகள் எந்த வித மருத்துவ முறைகளோ, மருத்துவ மனைகளோ, மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லாமல் நோயின்றி வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே உடலுக்கு தேவையானவற்றை உண்ணாமல் வாய்க்கு ருசியானவைகளை சாப்பிட்டு, உடலுழைப்பு இல்லாமல், அருந்த வேண்டியதை அருந்தாமல், கழிக்க வேண்டியதை சரிவர கழிக்காமல், உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு தானும் அவதிப்பட்டு அடுத்தவரையும் அவதிக்கு உள்ளாக்கி இயற்கைக்கு எதிராக நோய்நொடியுடன் காலம் கழிக்கிறான். இயற்கை வாழ்க்கை முறையை விடுத்து மற்ற மருத்துவ முறைகளை பின்பற்றுவதால் நாட்டில் நாளுக்கு நாள் நோய்கள் அதிகமாகின்றன.

ஒரு நோயை குணபடுத்த மருந்து உண்டால் பல புது நோய்கள் வருகின்றன.எனவே இது பொருத்தமான தீர்வாக இருக்க முடியாது.
குறைந்த பட்ச தேவைகள்,சுகங்கள் கூட இன்றைய நிலையில் மனிதனுக்கு எட்டா கனியாகிவிட்டது.நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த கஷ்டத்திற்க்கெல்லாம் மூல காரணம், இவையெல்லாம் இயற்கைக்கும், இயற்கை தர்மத்திற்கும் எதிராக செயல்பட்டதால் இயற்க்கை நமக்கு விதித்த தண்டனைகள். இந்த தண்டனையிலிருந்து வெளிப்பட இயற்கை வாழ்க்கை முறையை நம்பி சரணடைவதே வழியாகும். நல்ல வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
நாம் என்ன வென்றால் “இருப்பதை விட்டு விட்டு பறக்க ஆசைபடதே” என்பதற்கு இணங்க நம்முடைய மூதாதையர்கள் கொடுத்த உன்னத அறிவை விட்டு விட்டு தவறான பாதையில் பயணித்து எல்லா துன்பங்களையும் வலிய வரவழைத்து கொள்கிறோம்.

இதற்கு தீர்வு முதல் தேவை நம்முடைய மன மாற்றம் தான். நாம் மனம் மாறினாலே இவற்றிற்கெல்லாம் தீர்வு இயற்கை வாழ்க்கை முறையிலேயே இருக்கிறது. இயற்கையாக ஆரோக்கியத்தை கொடுக்கும் இயற்கை வாழ்க்கை முறையை விட்டு எல்லா பிரச்னைக்கும் மருந்துகளையும் வைத்தியர்களையும் தேடி அலைகிறோம். நாமிழந்த நம் முன்னோர்களின் உணவு பழக்கவழக்கங்களை மறுபடியும் கொண்டு வர முடியாமலிருக்கிறோம்,முயலாமலிருக்கிறோம்.இனியாவது விழித்துக் கொண்டு நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே, நம் வீட்டிலேயே இருக்கிறது என்று அறிந்து கொண்டு மாற்றதை நோக்கி பயணிப்போம்.