இயற்கை வழி வேளாண்மை – நம்மாழ்வார்

வேளாண்மைக்கு நீரும்,நிலமும் மற்றும் அவற்றை பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாதது. மழை நீரில் பயிர்களுக்குத் தேவையான எண்ணற்ற சத்துகளும் கரைந்த நிலையில் உள்ளன. நிலத்தில் செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்டு மகசூலை பெருக்க வேண்டும். இதுவே இயற்கை வேளாண்மையின் அடிப்படை ஆகும். அத்தகைய மழை நீரைப் பெறுவதைப் பற்றியும், செயற்கை உரங்களை பற்றியும் ஐயா நம்மாழ்வார் கூறுவதை பின்வரும் காணொளியில் காணுங்கள்.