சிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள்

மனிதர்களாகிய நமக்கு மாறிவரும் கால, சுற்று புற சூழ்நிலைகளாலும் தோன்றும் நோய்களிலிருந்து நம்மை காத்து கொள்ள சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம் அப்படி சத்து நிறைந்த உணவு வகைகளாக கீரைகள் இருக்கின்றன. இதில் சிறுகீரை பயன்கள் குறித்து இங்கு காணலாம்.

 

உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை சிறுகீரை கொண்டுள்ளது. மேலும் சிறுகீரை காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுப்பதுடன் காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது.

அனைத்து நோய்களுக்கும் தேவையான உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். சிறுகீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளைக் கூட எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் போன்றவற்றிலிருந்து  காக்கிறது.இவ்வாறு நோயற்ற வாழ்வைப் பெற சிறுகீரையையும் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.