சிறுநீரக கற்கள்

சிறுநீரக கல் என்றால்  என்ன ?

சிறுநீரகக் கற்கள் என்பது சிறிய  அளவுள்ள அடர்கரைசல்  ஆகும் சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ இந்த கரைசல் படிந்திருக்கும் இதை சிறுநீரக கல் ( KIDNEY STONE ) என்று கூறுவர்  . இந்த சிறுநீரக கல் என்பது கால்சியம் கற்கள் , யூரிக் அமில கற்கள்,ஸ்ட்ருவைட் கற்கள் என  மூன்று வகையாக பிரிக்கின்றனர் கால்சியம் கற்கள் தான் அதிகமாக வருபவை  முக்கியமாக இருபது முதல் முப்பது வயது வரை உள்ள மனிதர்களுக்கு வரும். கால்சியம் கல் என்பது மிக அதிகளவிளான  ஆக்ஸலேட் , பாஸ்பேட் அல்லது கார்போனேட் கரைசல்கள் ஒன்று  சேர்ந்து இந்த கால்சியம் கற்களை உண்டாக்கும். யூரிக் அமில கற்கள் என்பது அதிக அளவில் ஆண்களுக்கு மட்டும் ஏற்படும். ஸ்ட்ருவைட் கற்கள்- மெக்னீஸியம் அமோனியம்/ பாஸ்பேட் படிமங்கலளால் ஏற்படுபவை  இது  முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் முக்கியமாக  சிறுநீர் குழாய் சம்பந்தமான தொற்று நோய் இருந்தாலும் இது ஏற்படும் . இது  மிகப்பெரியதாக வளரக் கூடியவை. மேலும் சிறுநீரகங்கள், சிறுநீர்குழாய் அல்லது சிறுநீர் பையில் அடைப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது .