விளாம் பழம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய தகவல்கள்

[box type=”shadow” align=”” class=”” width=””]விளாம் பழம் ஆனது  மர ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது.இது தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம்.மேலும் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது. இந்த பழங்கள் மட்டுமின்றி இதன் இலைகள் மற்றும் வேர்களும் நமது ஆரோக்கியத்தில் ஆற்றும் நன்மைகளை இங்கு தெரிந்து கொண்டு,விளாம் பழத்தை உண்டு, நம் நல்லாரோகியத்திற்கு வித்திடுங்கள்.[/box]

1.வயிற்றுப் பிரச்சனைகளுக்கான தீர்வு

விளாம் பழம் செரிமானத்திற்கு நல்லது.மேலும் இது குடல் புழுக்களை குணமாக்கி நாள்பட்ட பேதியை அழிக்கிறது. வயிற்று புண்களை குணப்படுத்த உதவும். வயிற்று போக்கு மற்றும் அஜீரணம் நீங்க, தேன் மற்றும் சீரகம் கொண்ட பழுத்த விளாம் பழக் கூழ் கலந்து கொடுக்கப்படுகிறது.

2.விளாம் பழத்தில் உள்ள சத்துக்கள்

  1. விளாம் பழத்தில் வைட்டமின் C , தியாமின், ரைபோஃப்ளேவின் மற்றும் பீட்டா கரோட்டின், வைட்டமின் A ஆகியவை காணப்படுகின்றன.
  2. இதன் இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன.
  3. இதன் பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன

3.விளாம் பழத்தின் பயன்கள்

  1. வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சர்க்கரை கலந்த பழச்சாறு இரத்தம் சுத்திகரிக்கவும் செரிமான கோளாறுகளை நீக்கவும் பயன்படுகிறது.
  2. உப்பு மற்றும் புளி சேர்த்து இந்த பழத்தில் செய்யப்பட்ட சட்னி விக்கல்கள் குணப்படுத்த பயன்படும்.
  3. மார்பக புற்றுநோய் அல்லது கருப்பை புற்றுநோயை தடுக்க தேன், சீரகம், மற்றும் ஏலக்காய் ஆகியவற்றுடன் பழுத்த விளாம் பழக்கூழ் கலந்து கொடுக்கப்படுகிறது.மேலும் இது மலட்டுத்தன்மையை குணப்படுத்த உதவும்.
  4. விளாம் பழத்தில் உள்ள வைட்டமின் சி ஸ்கர்வியை குணப்படுத்தும்.
  5. இதில் உள்ள தியாமின், ரைபோஃப்ளேவின் மற்றும் பீட்டா கரோட்டின் இதயம் மற்றும் கல்லீரலுக்கான மருந்துகளில் இது ஒரு முக்கிய பொருளாக  விளங்குகிறது.
  6. நாள்தோறும் ஒரு பழம் வீதம் தொடர்ந்து 21 தினங்களுக்கு இப்பழத்தை சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும்.
  7. விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.
  8. வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.
  9. சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும்.மேலும் நன்கு பசிக்கும்.
  10. தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.

4.மர ஆப்பிளின் இதர பாகங்களும் பயன்களும்

  1. விளாம் மரத்தில் காணப்படுகிற பசை நீரிழிவுக்கு சிகிச்சையளிக்க பயன்படும்.
  2. இதன் இலைகள் தொண்டை புண், நாள்பட்ட இருமல், மற்றும் பிற சுவாச கோளாறுகளை குணப்படுத்த உதவும்.
  3. இதன் வேர்கள் காது சிகிச்சைக்கு பயன்படுகிறது.
  4. விளாம் பட்டை மற்றும் தண்டு இரண்டும் அதிக இதயத் துடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  5. மிளகுடன் கலந்த விளாம் பழ இலைச்சாறு அனோரெக்ஸியா மற்றும் மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும்.
  6. தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவை குணமடையும்.
  7. விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.
  8. விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.
  9. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விளாம்பழ மரத்தின் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வர, பருவ பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

5.விளாம் பழத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள்?

விளாம் பழ ஊறல், ஊறுகாய், சட்னி, சர்க்கரையும் பழச்சாறும் கலந்த பாகு, பழச்சாறு கலந்த பானம் மற்றும் பழமும் வெண்ணெயும் சர்க்கரையும் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட இனிப்புப் பண்டம் ஆகியவை விளாம் பழத்தின் பல்வேறு பயன்பாட்டு உணவு வடிவங்கள் ஆகும். பழக்கூழ் தயிருடன் கலக்கப்பட்டு ரைட்டாவாக பயன்படுத்தப்படுகிறது.

6.இறுதியில் ஓர் அறிமுகம்

விளாம் பழத்தைப் பற்றி தெரியாதவர்களுக்கு, அதன் தனித்துவமான மற்றும் அதிக சக்தி வாய்ந்த வாசனை அதை விரும்பத்தகாததாக மாற்றக்கூடும் மற்றும் இதை அழுகிய அல்லது புளித்த பழம் போல வாசனை என்று பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால் அதன் நன்மைகளை இங்கு அறிமுகப்படுத்தி விட்டோம்.எனவே விளாம் பழத்தை உண்டு பயன் பெறுங்கள்.