மன அழுத்ததிற்கு மருந்து தேவையா?

தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால்,நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது,சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால், களைப்பு மற்றும் அதிக வேலைப்பளு, தூக்க தொந்தரவுகள் போன்ற காரணங்களால் மன அழுத்தம் உருவாகும்.இதன் அறிகுறிகள் பசியின்மை,குறைவான கவனம், ஞாபகமறதி,குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள்,கோபம்,வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள்,மனவியல் ரீதியான வெளிப்பாடுகள்,மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு,படபடப்பான நடவடிக்கைகள் போன்றவை ஆகும்.மேலும் இதனால் வயிற்று நோய்கள்,போதைக்கு அடிமையாதல், ஆஸ்த்துமா,களைப்பு,படபடப்பு, தலைவலி,அதிக இரத்த அழுத்தம்,தூக்கமின்மை,வயிற்று, ஜீரண கோளாறுகள்,இருதய நோய்கள், மனநிலை பாதிப்பு போன்றவை தோன்றலாம். இத்தகைய மன அழுத்ததிற்கு மன அமைதியே மருந்தாகிறது என்பதை தெரிந்து கொள்ள பின்வரும் காணொளியில் காணுங்கள்.