முடி உதிர்வை தடுக்கும் வழிமுறைகள் என்ன?

இன்றைய வாழ்வியல் முறையில் ஆண் பெண் இருபாலருக்கும் அதிகமான பிரச்சனை என்னவென்றால் முடி உதிர்வு இந்த முடி உதிர்தல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்

இந்த முடி உதிர்வு சுமார் இருபது வயதிலிருந்து முப்பது  வயது உள்ள  ஆண் பெண் இருவருக்கும் நடக்கின்றது இதைத் தடுப்பதற்கு இயற்கையான வழி என்னவென்று இப்போது பார்த்தால்  ஊட்டச்சத்து குறைவு தான் ஊட்டச்சத்து குறைபாட்டால் முடி உதிர்வு அதிகம் ஏற்படுகின்றது ஆரோக்கியமான முடி வளர புரதச் சத்து இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் அவசியமாகின்றன அது என்னென்ன உணவுகள் என்று பார்த்தால் கேரட் பச்சைக் காய்கறிகள் மிளகு எலுமிச்சை திராட்சை உலர் பழங்கள் மீன் முட்டை போன்ற முக்கிய உணவுகள் கூந்தல் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும்  வளர உதவி செய்கின்றன மேலும்

●மனோவசிய முறையில் முடி உதிர்வு தடுக்கப்படுகிறது எப்படி என்றால் அதிகப்படியான மக்கள் எதிர்மறையான எண்ணங்களை  மீண்டும் மீண்டும் நினைப்பதால்  மன அழுத்தம் ஏற்பட்டு முடி உதிர்வு அதிகமாக நடக்கின்றன இதை தடுக்க  நேர்மறை எண்ணங்களை சிந்திக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு இந்த முடி உதிர்வு தடுக்கப்படுகிறது .

●தலையில் ஆங்காங்கே வழுக்கை இருப்பதுபோல் தோன்றும் நபர்களுக்கு சிறந்த  மருத்துவ குறிப்பு  வெங்காயம் தான் இந்த வெங்காய சாற்றை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால் இந்த பிரச்சனை தீரும்

●மேலும் நோய் எதிர்ப்பு  சக்தி குறைவு கோபம் கவலை போன்ற முக்கியமான பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படும் பொழுது இந்த முடி உதிர்வு மீண்டும் மீண்டும் நடக்கின்றது ஆகவே மனதை ஆனந்தமாய் வைத்து சந்தோஷமாக சிரித்து வாழுங்கள்   முடி உதிராது என்ற நம்பிக்கையில் இருங்கள்