வாழையிலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

உணவே மருந்து-தமிழ்

வாழை இலையில் சாப்பிடுவது என்பது நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற பாரம்பரியமான முறையாகும்.இத்தகைய வாழை இலையில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் கிடைக்கும் பலன்களை பின்வரும் கட்டுரையில் காண்போம்

1. இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும்.ஆதலால் உணவில் உள்ள  நச்சுக்கிருமிகளை இது அழிக்கும் தன்மை கொண்டது.

2.இதன் நஞ்சு முறிக்கும் தன்மையால், கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள்.

3.வாழை மரத்தின் நச்சு முறிக்கும் பண்பிற்கு திருமணப் பந்தலிலும், இடுகாட்டுப் பாடையிலும், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

4.வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

5.வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் செரிக்கச் செய்வதுடன் வயிற்றுப்  புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

6.வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட  ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

7. வாழை இலை உணவு சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து விடுவிக்கிறது.

8. வாழை இலையில் தினமும் உணவு உண்டால், நம் உடல் செல்களில்  சிதைவு ஏற்படாமல் இளமையுடன் அதிக நாட்கள் இருக்க முடியும்.

9. மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன

10 . வாழை இலை குளிர்ச்சியானதாக இருக்கும், மேலும் அதிலுள்ள பாலிஃபெனால் நமது செல்களில் உள்ள டிஎன்ஏவை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது.

11. சூடான சாதம் மற்றும் பதார்த்தங்களை வாழை இலையில் பரிமாறும்போது, அதன் இளம் சூட்டில் வாழை இலை லேசாக வெந்து, இலையின் பச்சையத்தில் உள்ள பாலிஃபெனால் நாம் சாப்பிடும் உணவில் கலந்துவிடும். அதன் மூலம் வாழை இலையிலுள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்ஷியம் ஆகிய சத்துக்களும் உணவுடன் சேர்ந்து உடலுக்கு கிடைக்கின்றன.

12. வெளியூர்களுக்குப்  பயணம் செல்லும்போதும் கூட வாழை இலையில் உணவுப் பண்டங்களை கட்டி எடுத்துச் சென்றால் ருசியும் மணமும் அப்படியே இருக்கும். வாழை இலையை நமது தேவைக்கேற்ப எந்த அளவிலும் வெட்டி எடுத்துப் பயன்படுத்தலாம்.