வைட்டமின் K

நமது உடல் நலமுடன் இருக்க போதுமான ஊட்டச்சத்துகளும் அவசியம். அதில் வைட்டமின்  K போன்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று என்கிறார்கள் மருத்துவர்கள். வைட்டமின்  K நீரில் கரையைக் கூடிய ஊட்டச்சத்தாகும். இது இரண்டு வகைகளில் காணப்படுகிறது. ஒன்று K1 மற்றொன்று K2. நமது குடலில் உள்ள பாக்டீரியா மூலம் K1 விட்டமீனை K2 ஆக மாற்றம் செய்யப்படுகிறது.இதை நமது உடல் நிறைய வகைகளில் பயன்படுத்தி கொள்கிறது. வைட்டமின்  K பாக்டீரியாவால் குடலில் இயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றது. இது ரத்தம் கெட்டிப்பட, எலும்பின் ஆரோக்கியம், ரத்தம், எலும்பு, சிறுநீரகம் இவற்றிக்கு தேவையான புரதம் அளிக்க உதவுகின்றது.

வைட்டமின்  K நன்மைகள்

  • வைட்டமின்  K எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது மற்றும் ஆஸ்ட்டியோபோரஸிலிருந்து பாதுகாக்கிறது.
  • இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.

 

வைட்டமின்  K காணப்படும் உணவுகள்

  • விட்டமின் K1 கீரைகள், காய்கறிகள் போன்றவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.
  • முளைக்கட்டிய பயிறு வகைகள், கொடி முந்திரி, உலர்ந்த துளசி, கீரைகள், செங்கீரை(சிகப்பு தண்டுக்கீரை) போன்றவற்றில் காணப்படுகிறது.
  • பச்சை இலைக் கீரைகளில் அதிகளவு வைட்டமின்  K காணப்படுகிறது. பாதி கப் கீரையில் 400 மைக்ரோ கிராம் அளவிற்கு வைட்டமின்  K காணப்படுகிறது. இது ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின்  K அளவை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும்.
  • தமிழகத்தின் சில மாவட்டங்களில் கருப்பு நிற திராட்சையைத் தான் கொடி முந்திரி என்று அழைக்கிறார்கள். 1 கிண்ண கொடி முந்திரியில் 104 மைக்ரோ கிராம் அளவிற்கு வைட்டமின்  K உள்ளது. இது உங்கள் தினசரி வைட்டமின்  K தேவையில் நூறு சதவீதம் பூர்த்தி செய்கிறது.

 

  • உலர்ந்த துளசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் மட்டும் இல்லை. 45 சதவிகிதம் அளவு வைட்டமின்  K உள்ளது. ஒரு டீ ஸ்பூன் மட்டும் சாப்பிட்டால் போதும் தினசரி அளவு சரியாகி விடும்.
  • ஒரு அளவான வடிவ வெள்ளரிக்காயில் உள்ள 60 சதவிகித அளவு வைட்டமின்  K ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின்  K தேவையை பூர்த்தி  செய்கிறது.
  • பச்சை முட்டைகோஸ், காலிப்ளவர், பச்சை நிற இலைகள், தாவர எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின்  K கிடைக்கின்றது. போதுமான அளவு வைட்டமின்  K உடலில் இல்லை எனில் சிறு காயத்திலும் கூட அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு வைட்டமின்  K குறைபாடு ஏற்படும். மிக அதிக அளவு வைட்டமின்  K திசுக்களுக்கும் கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
  • கொழுப்பில் கரையும் வைட்டமின் A,D,E,K ஆகியவை நீண்ட காலம் உடலில்  சேகரிப்பில் இருக்கும்.