பப்பாளி பழம்

பழங்களில் மிகக் குறைந்த கலோரி  பப்பாளிப்பழத்தில் உள்ளது. 100 கிராம் பப்பாளி 32 கலோரிகளைக் கொண்டுள்ளது. பப்பாளி பழங்கள், விதைகள் மற்றும் இலைகள் மருத்துவ பகுதிகள். ஒவ்வொரு நாளும் உங்கள் உணவில் பப்பாளியைச் சேர்த்தால், நோய் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

பப்பாளியின் நன்மைகளை இப்போது பார்ப்போம்


இதில் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் பி 1, வைட்டமின் பி 2 மற்றும் நியாசின் ஆகியவை சிறிய அளவில் உள்ளன. இதில் ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
ஏறத்தாழ 30 கிராம் பப்பாளியில் வைட்டமின் பி 1 - 11 மில்லிகிராம், வைட்டமின் பி 2 - 72 மில்லிகிராம், வைட்டமின் சி - 13 மில்லிகிராம், இரும்பு - 0.1 மில்லிகிராம், சுண்ணாம்பு உள்ளது - 0.3 மில்லிகிராம் உள்ளது .

பப்பாளியின் மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம்

1.பப்பாளிக்காயை நறுக்கி உண்டு வந்தாலோ அல்லது பப்பாளி ஜூசை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்பூழுக்கள் வெளியேறிவிடும்.

2.பப்பாளிக் காயை கூட்டாக சமைத்து செய்து சாப்பிட்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

3.பப்பாளியில் சுரக்கும் பாலினை காயங்கள் உள்ள இடங்களில் பூசினால் காயம் விரைவில் சரியாகும்.

4.பப்பாளி இலையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை உடல் மற்றும் வலியுள்ள பிற இடங்களில் கழுவினால் உடல் வலி நீங்கும்.

5.பப்பாளி இலையை அரைத்துப் கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால்  கட்டிகள் உடையும், வீக்கம் வத்தும்.  பப்பாளி இலைகளின் சாறு ஜூரம் நீக்கும்.

6.இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக வேலை செய்ய வைக்கிறது.

7.பப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கலும் சரியாகிவிடும்.

8.கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப்பழமே சிறந்த உணவு.

9.பப்பாளி உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராடும் பண்புகள் கொண்டுள்ளது.  ஆதனால்தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால், பப்பாளியை சாப்பிடுகின்றனர்.

10.வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்செரிச்சல், அல்சர், சர்க்கரை வியாதி, கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.

11.சாப்பாட்டிற்கு பின்பு பப்பாளியை சாப்பிட்டால் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும்

12.குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.

13.மாதவிடாய் சரியான காலத்தில் வராமல் சிரம படும் பெண்கள் தினமும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.

14.பப்பாளிப்பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன், பல், எலும்பு வலுவடையவும் உதவுகிறது.

15.நரம்புத்தளர்ச்சிக்கு மிக நல்லது.

16.பப்பாளியிலுள்ள பப்பாயின் என்சைம்களில் ஆர்ஜினைன் என்பது ஆண்களுக்கான உயிர் அணுக்களின்உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், கார்பின் இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.

17.பப்பாளிப்பழம் கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்,  இதயத்திற்கு நல்லது,  பித்தத்தைப் போக்கவல்லது,

18.பப்பாளியை தொடர்ந்து நான்கு வாரங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புச்சத்து 19.2 சதவிகிதம் குறைத்துவிடும்.


19.நன்றாக பழுத்த பப்பாளிப்பழத்தை கூழ் போன்று பிசைந்து அதில் சிறிது தேன் கலந்து முகத்தில் பூசினால் முகச் சுருக்கம் நீங்கி முகம் நல்ல பொழிவு பெறும்.

20.பப்பாளிப்பழத்தை முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசிக்கும்.

21.தினசரி பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் அகற்றி இளமைப்பொழிவோடும் வாழலாம்

22.பப்பாளிப்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.

23.பப்பாளிபழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு எந்தவித நோயும் தாக்க வாய்ப்பில்லை என்பது
கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்கும் பயன்படும்.

நன்றி
உணவே மருந்து - தமிழ்


Previous Post Next Post