8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking

நடைப்பயிற்சி செய்வதனால் உடலுக்கு நன்மை மட்டுமே ஏற்படும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு மிக சிறந்த நன்மைகளை தரும். இதனை காலையில் அல்லது மாலையில் செய்வது நல்லது. திறந்த வெளியில் செய்வது மிகவும் நல்லது. முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும்.

ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இந்த 8 வடிவ நடைபயிற்சியின்போது வெறும் காலில் தான் நடக்கவேண்டும். இதனால்பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் நன்றாக ஏற்பட்டு உடல் உள்ளுறுப்புகள் நன்கு செயல்பட்டு குறிப்பிட்ட நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

மூக்கடைப்பு இதன் மூலம் விரைவில் குணமடையும். இப்பயிற்சியை செய்யும் போது இருமல் ஏற்பட்டு சளி நன்றாக வெளியேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தூக்கமின்மை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும், கருப்பை பிரச்சனை, இதய நோய், தோள்பட்டை வலி, முதுகு வலி, முழங்கால் வலி, கழுத்து வலி, ஒற்றைத் தலைவலி, நரம்புக்கோளாரு, மன இருக்கம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தப்பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், தைராய்டு பிரச்சனை, சிறுநீரகப் பிரச்சனை ஆகியவை குணமடையும்.

ஏதாவது அறுவைசிகிச்சை செய்தவர்கள் 6 மாதகாலம் வரை இந்த 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. 6 மாதம் கழித்து டாக்டரின் ஆலோசனை பெற்ற பின்பு இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

கற்பிணி பெண்கள் 8 வடிவ நடைபயிற்சியை கட்டாயமாக செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் உடலில் பலவகையான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 8 வடிவ நடைபயிற்சியை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மேற்கொள்ளலாம். மேலும் எவ்வாறு இதனை செய்யவேண்டும் என்பதை காணொளியை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்…

8 வடிவ நடைபயிற்சி