Bhujangasana – Cobra Pose – புஜங்காசனம்

வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் புஜங்காசனம்.
இந்த ஆசனம் செய்யும் போது பாம்பு படமெடுப்பது போல உடல் வளைந்து நிமிா்ந்து முகம் நேராக நோக்குகிறது. அதனால் இது சா்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
Strengthens: Vertebral column
Stretches: Lung, Shoulder, Thorax, Abdomen,
Preparatory poses: Urdhva Mukha Shvanasana, Setu Bandha Sarvangasana
Also known as: Cobra pose
Note: Consult a doctor before beginning an exercise regime

பயன்கள்:
•வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும்.
•சிறுநீரகம், கல்லீரல், குடல்கள், பிறப்புறுப்பு, கணையம், அட்ரீனல் சுரப்பிகளுக்கும் ரத்த ஓட்டம் அதிகமாகி இவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்க செய்கிறது.
குறிப்பு:
வயிறு, குடல் புண், குடல் பிதுக்கம் (hernia), விரைவாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.