Shoulder stand pose – சர்வாங்காசனம்

ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ள சர்வாங்காசனம்.
பெயர் விளக்கம்: ‘சர்வ’ என்றால் எல்லாம் என்று பொருள். ‘அங்க’ என்றால் உடல் பகுதி என்று பொருள்.

Stretches: Neck, Shoulder
Preparatory poses: Setu Bandha Sarvangasana, Virasana, Halasana,
Pose type: Inversion
Also known as: Supported shoulderstand, Shoulderstand, Salamba sarvangasana
Note: Consult a doctor before beginning an exercise regime.

பயன்கள்:
1. சிறுவயதினரின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்து போன்று உதவுகிறது.
2. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தைராய்டு, பாரா தைராய்டு, சுரப்பியை நன்கு இயங்கச் செய்கிறது. அச்சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்குகிறது.
3. மற்றும் தைமஸ் சுரப்பி செயல்படத் தூண்டுகிறது. பலவிதமான மனக்கோளாறுகளை நீக்கி மனோசக்தியை மிகச் செய்கிறது.
4. நினைவாற்றல் அதிகரிக்கும். குரல் வளம் சிறப்பாக அமையும்.
5. சளி, இருமல், நரம்பு பலகீனம், மார்புவலி, தொண்டை வலி, தொண்டை சதை வளர்ச்சி, தலைவலி, அண்டவாயு நீங்க உதவுகிறது.
6. ஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ளது.

எச்சரிக்கைகள் :
உயர் ரத்த அழுத்தம் உள்ள போது இந்த ஆசனத்தை செய்வது உசிதமல்ல.
கழுத்து, தோள்பட்டை, கீழ் முதுகு, இடுப்பு ஆகிய பகுதிகளில் கோளாறுகள் இருக்கும்போதும் இந்த ஆசனத்தை செய்வது நல்லதல்ல.